பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பொழுது புலர்ந்தது

-

(4) அதை ஏற்றுக்கொள்ளச் சம்மதியாத மாகாணங் கள் இப்பொழுதுள்ள நிலையிலேயே இருக்கும், ஆல்ை இஷ்டப்பட்டால் பின்னல் சேர்ந்து கொள்ளவும் செய்ய லாம். அல்லது ஒன்று சேர்ந்து வேறொரு ஐக்கியப் பிர தேசமாகவும் ஆகலாம்.

(5) போர்முடியும் வரை பிரிட்டிஷ் சர்க்காரே இந்தி யாவைப் பாதுகாக்கும் பொறுப்பை வைத்துக்கொண் டிருப்பார்கள்.

(6) ஆயினும் பிரிட்டிஷ் சர்க்கார், முக்கியமான ககதி களின் தலைவர்கள் சர்க்கார் கிர்வாகத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

இந்தத் திட்டம் பிரிட்டிஷ் சர்க்காரின் ‘ கியாயமான முடிவான யோசனை ” என்றும், இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்க அல்லது முழுவதுமாகத் தள்ளிவிடுக என்றும் கிரிப்ஸ் ஆரம்பத்திலேயே கூறினர்.

நீங்கள் சம்மதித்தாலும் சம்மதியாவிட்டாலும் இது தான் எங்கள் முடிவான யோசனை, என்ன சொல்லுகிறீர் கள், உங்கள் இஷ்டம் என்ன என்று கேட்பது, ஆண் டான் அடிமையிடம் கேட்பதுபோல் இருக்கிறதல்லவா? இப்படித்தான் கர்ஸன் பிரபு வங்காளத்தைப் பிரித்துவிட்டு, இது முடிந்த காரியம், இதை மாற்ற முடி யாது என்று பிடிவாதம் செய்தார். ஆனல் அது மாற்றப் படாமல் இருக்கவில்லை. அதுபோல் இப்பொழுதும் முடிவான யோசனே முடிந்து போகும் என்பதில் சந்தேகம் இல்லை.

இனி இந்த முடிவான யோசனையைக் கவனிப் போம்:- -

கானடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருப்பவர்களில் பெரும்பாலோர் பிரிட்டனிலிருந்து குடி யேறிய பிரிட்டிஷ் மக்கள். அதல்ை அந்தநாடுகளை டொமி