பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரிப்ஸ் தோல்வி 79

கிரிப்ளலாம் திருத்தினர். அப்படித்திருத்தி முடிந்த யோசனை சேனதிபதியின் இலாகா போர் நடைமுறையை யும் பாதுகாப்பு மெம்பரின் இலாகா அதுபோக எஞ்சிய பாதுகாப்பு விஷயங்களையும் கவனித்துக்கொள்ளும் என்பதாகும்.

இப்படி முடிவாக இருவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு யோசனேக்கு வந்துகொண்டிருப்பதை அறிந்த இந்திய மகாஜனங்கள் சரி, முட்டுக்கட்டை தீர்ந்துவிடும், போரில் இறங்கி ஜப்பானேத்துரத்தி விடுவோம் என்று எண்ணி ஞர்கள். ---

ஆல்ை பிரிட்டிஷ் தெய்வத்துக்கு அது ஏற்குமா ? இலாக்காக்களைப் பிரிப்பதுபற்றி யோசனை முடிந்தாலும் இந்தியப் பாதுகாப்பு மெம்பரிடம் தரப்படும் விஷயங்கள் எவை என்பது காங்கிரஸுக்கு விளங்கவில்லை. அதனல் ஆஸாதும் நேருவும் ஏப்ரல் 9-ம் தேதி மாலை கிரிப்ஸைக் கண்டு கேட்டார்கள். அதற்கு அவர் பழைய காகிதம் பென்ஸில்’ ஜாப்தாவையே காட்டினர் !

அதுமட்டுமன்று, கிரிப்ஸ் ஆஸாத் நேருவைக் கண்டு பிரிட்டிஷ் திட்டத்தைக் கூறிய நாள்முதல் சம்பாஷணை களிலும் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளிலும் “தேசிய சர்க்கார்” - “மந்திரிசபை’ என்ற மொழிகளேயே உபயோகித்து வந்தபடியால் எல்லோரும் இப்பொழு துள்ள வைஸி ராய் நிர்வாகசபை போய்விடும், இங்கிலாந்தி லுள்ளது போன்ற மந்திரிசபை ஏற்பட்டுவிடும் என்று எண்ணினர்கள். ஆனல் இப்பொழுது வைஸி ராயும் நிர் வாக சபையும்தான், வேறு மாற்றம் கிடையாது என்று கூறி ஆஸ்ாதையும் நேருவையும் வெறுங்கையோடு அனுப்பிவைத்தார்.

அத்துடனில்லாது மறுநாள் ஆஸாத்துக்கு இந்தியா வைக் காக்கவேண்டியது பிரிட்டிஷாரின் பொறுப்பு ;