பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பொழுது புலர்ந்தது.

அப்படி யிருக்க நீங்கள் சேனதிபதியின் காரியங்களில் தலையிடவிரும்புகிறீர்கள் ; தேசிய சர்க்காரை மந்திரிசபை முறையில் அமைக்க வேண்டுமானல் அரசியல் சட்டம் புதிதாகச் செய்யவேண்டாமா, அது யுத்தசமயத்தில் சாத்தியமா? சட்டம் வேண்டாம், ஒப்பந்தம் போதும் என்று கூறினல் சிறுபான்மையோரைப் பெரும்பான்மை யோர் அடக்கிவிடுவார்களே, சிறுபான்மையோரைக் காப்ப தாக காங்கள் வாக்களித்திருக்கிருேம் அல்லவா, அதனல் பிரிட்டிஷ் சர்க்காரின் திட்டத்துக்கு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாது ‘ என்று ஒரு கடிதமும் எழுதினர்.

அதற்கு ஆஸாத், “ நாங்கள் சேனதிபதிக்கு நியாய மாகவுள்ள அதிகாரத்தைக் கொஞ்சமும் குறைக்க விரும்ப வில்லை, அதற்குப்பதிலாக அவர்க்கு வேறு சில அதிகாரங் களும் கொடுக்ககூடத் தயாராயிருந்தோம், உங்களுக்கு ஜனங்களிடம் நம்பிக்கையில்லை என்பதே உண்மை, ஆளுல் ஜனங்களை கம்பாதவரை சரியான பாதுகாப்பை ஏற்படுத்த முடியாது என்பதை மறந்துவிடுகிறீர்கள் ; நாங்கள் தங் களைக் கண்ட முதல்நாளிலேயே இங்கிலாந்தில் அரசரும் மந்திரி சபையும் இருப்பது போலவே இங்கே வைவிரா யும் மந்திரிசபையும் கூடிய தேசிய சர்க்காரை அமைப்ப தாகக் கூறினர்கள். ஆனல் இப்பொழுது பழய நிர்வாக சபையையே காட்டுகிறீர்கள். நாங்கள் புதிய சட்டம் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை, நமக்குள் ஒப்பந் தம் செய்துகொண்டால் போதும் என்றே கூறினுேம். பெரும்பான்மையோர் ஏதேச்சாதிகாரம் என்ற விஷயம் இதுவரை கிளம்பவில்லை. அதிகாரத்தை மாற்றிவிட் டால் அது எளிதில் தீர்ந்துவிடும். அதுவும் தவிர காங் கிரஸ் அதிகாரம் கேட்பதெல்லாம் தனக்கன்று, இந்திய மகாஜனங்கள் எல்லோர்க்குமே, அதனுல் எல்லோரும் சேர்ந்த மந்திரிசபை அமைத்துவிடுவதில் கஷ்டம் ஏ ற்