பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

ஆகஸ்டு திர்மானம் கிரிப்ஸ் வந்தார். கட்சித் தலைவர்களிடம் பிரிட்டிஷ் திட்டத்தைத் தெரிவித்தார். ஆனல் மிதவாதிகளுக்குச் செல்வாக்கு கிடையாது. முஸ்லிம் லீக் நமது பிரிட்டி ஷாரின் செல்வப் பிள்ளை, அவர்கள் சொல்லேத் தட்டாது. அதிகத் திறமை வாய்ந்த அரசியல் ஸ்தாபனம் காங் கிரஸ் ஒன்றே, அதுவே அனைவரையும் அணைத்து தேசிய மயமாயிருப்பது என்று 1940 ஆகஸ்டில் அமரிதுரை பார்லி மெண்டு சபையில் கூறியதால் இந்தியர் மனப்பேழையின் சாவி காங்கிரஸிடமேதான் உண்டு என்று தெரிந்திருந்த படியால் காங்கிரஸ் தலைவர்களுடனேயே விவாதங்களே நடத்தினர். ஆனால் உண்டான பலன் யாது?

கிரிப்ஸ் வரப்போகிறார் என்று கேட்டவுடன் இந்திய மக்கள் நம்முடைய கிரிப்ஸா, நமக்குக் கட்டாயம் நன்மை யான யோசனைகளையே கொண்டு வருவார் என்று மனப் பால் குடித்தார்கள். சர்ச்சிலும், ரஷ்யர்கள் கிரிப்ஸிடம் நம்பிக்கை வைத்திருந்தபடியால் கிரிப்ஸ் போய் ரஷ்யாவை நம் பக்கம் திருப்பிவிட்டார், அதுபோல் இந்தியர்க்கும் கிரிப்ஸிடம் நம்பிக்கை இருப்பதால் அவர் க&ளயும் நம் பக்கம் திருப்பிவிடுவார் என்று எண்ணியே அமரியை அனுப்பாமல் கிரிப்ஸை அனுப்பி வைத்தார்.

கிரிப்ஸ் வந்தால் நன்மை கிடைக்கும் என்று இந்தியர் எதிர்பார்த்ததும் சரி, கிரிப்ஸ் போனல் இந்தியா ஒத்து ழைக்கும் என்று சர்ச்சில் எதிர்பார்த்ததும் சரி. ஆல்ை ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை கூறியபடி இந்தத் திட்டம்