பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350 ⚫ போதி மாதவன்

தன்னைப் போலவே வேறு உருவங்கள் தோன்றும்படி செய்தல், எல்லா உருவங்களையும் ஒன்றாக்கிக் காட்டுதல், தன்னைக் கட் புலனாகாதபடி மறைத்துக் கொள்ளல், நினைத்தபடி வானத்திலே பறந்து செல்லுதல் முதலிய பல சக்திகள் அவனுக்கு உண்டாகி விட்டன.

அந்த நிலையில் அவன், பிம்பிசாரருடைய குமாரன் மகத நாட்டு இளவரசனான அஜாதசத்துருவைத் தோழனாக்கிக் கொண்டு, அவன் மூலம் பிம்பிசாரரையும் புத்த பகவரையும் ஒழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டான். புத்தரை ஒழித்துவிட்டு அவருக்குப் பதிலாகத் தானே பிக்குக்களின் தலைவனாக வரவேண்டும் என்பதே அவனுடைய ஆசை. அப்படி வரும்போது, தன்னையும் தன் பிக்குக்களையும் ஆதரித்து உதவி புரிவதற்கு உரிய வள்ளலாக அஜாதசத்துருவை முதலில் அரசனாக்கவேண்டும் என்றும் அவன் கருதினான்.

புத்தர் கௌசாம்பி நகரில் இருந்த சமயத்தில் ஒருநாள் தேவதத்தன் இராஜகிருகத்தில் ஆகாய மார்க்கமாக அரண்மனைக்குப் பறந்து சென்று, அஜாதசத்துருவைக் கண்டு, தன் இருத்தி ஆற்றல்களை அவனிடம் காட்டினான். மன்னன் ஒரு பக்கம் பயமும், ஒரு பக்கம் வியப்பும் கொண்டு, தேவதத்தனுக்காகத் தான் எது வேண்டுமானலும் செய்யத் தயாராயிருப்பதாக அறிவித்தான். இரண்டு இளவரசர்களும் நெடுநேரம் சதி செய்து கலந்து பேசிக் கொண்டார்கள். முதலில் அஜாதசத்துரு தன் தந்தையைக் கொலை செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பெற்றது.

புத்தரைச் சந்தித்தல்

புத்ததேவர் இராஜகிருகத்திற்கு வந்திருந்த சமயத்தில் தேவதத்தன் அவரிடம் சென்று வணங்கித் தன்