பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண வாழ்க்கை ⚫ 49

தனுடைய கவனத்தை முதலிலேயே கவர்ந்து விட்டன. அவள் நிமிர்ந்த தலையுடன், அண்ணலை ஒருமுறை நேராகப் பார்த்தாள். ‘எனக்கு ஏதாவது பரிசுண்டா ?’ என்று கேட்டுக் கொண்டே, அவள் புன்னகை பூத்து நின்றாள், இளவரசன் முன்னால் வைத்திருந்த பரிசுப் பொருள்கள் யாவும் தீர்ந்து விட்டன. ஆயினும் முதற் பரிசு பெறவேண்டிய பசுங்கிளி அவன் எதிரே காத்து நின்று கொண்டிருந்தது. அவ்வளவில் சித்தார்த்தன், ‘பரிசுகள் தீர்ந்துவிட்டன! ஆயினும், எனது மரகத மாலையை நகரின் அழகு ராணியான நீ ஏற்றுக் கொள்!’ என்று சொல்லிக் கொண்டே, தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி அவளிடம் கொடுத்தான். இருவருடைய கண்களும் சந்தித்தன. இருவரும் பிரியும்போது எழுச்சியுடன் காணப் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியை அறிந்த சுத்தோதனர் தமது கருத்துப்படியே இளவரசன் யசோதரையின்பால் காதல் கொண்டுள்ளான் என்று களிப்படைந்து, மைத்துனரைச் சந்தித்து விவரத்தைக் கூறினார். சுப்பிரபுத்தர் இளவரசனின் வீரத்தையும், பலத்தையும் பரீட்சித்துப் பார்க்க விரும்பினார். ‘அரசே! விரைவில் நகரின் இளைஞர்களை அழைத்துப் போட்டிப் பந்தயங்களுக்கு ஏற்பாடு செய்யலாம். தாங்கள் எதற்கும் கவலையுற வேண்டாம். என் கைவண்ணத்தையும், மக்கள் தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் அளியுங்கள்!’ என்று தைரியமாக வேண்டிக் கொண்டான்.

அவ்வாறே ஒரு வாரத்தில் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப் பெற்றது. சாக்கிய குலத் திலகங்களான யுவர்கள் பலரும் அவைகளிலே கலந்து கொண்டனர். குதிரை யேற்றம், வில்வித்தை முதலிய ஒவ்வொரு பந்தயத்திலும் சித்தார்த்தனே வெற்றி பெற்றான். கலைகள் பலவற்றிலும் அவனே முதல்வன் என்றும் நிரூபித்தான். நகரமே