பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 ⚫ போதி மாதவன்

அரண்மனையில் திரண்டு நிற்பது போல் கூடியிருந்த மக்களனைவரும் பெருமகிழ்ச்சி கொண்டனர். இளவரசனின் திறமைகளைக் கண்ணாரக் கண்டு சுப்பிரபுத்தரும் தம் அருமை மகள் யசோதரை அவனுக்கே உரியவள் என்று அந்தச் சபையிலேயே அறிவித்தார்.

அவ்வாறு சித்தார்த்தனுக்கும் யசோதரைக்கும் ஒரு. நன்னாளில் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.

சில வரலாறுகளில் யசோதரையின் பெயர் பத்த கச்சனா என்று குறிக்கப் பெற்றுள்ளது. சித்தார்த்தன் பிற்காலத்தில் புத்தராகி உபதேசம் செய்கையில், ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்ற நாற்பதாயிரம் பெண்கள் எனக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்; பத்த கச்சானா எனது மனைவி’ என்று கூறியுள்ளதில், பத்த கச்சானா யசோதரா தேவியே என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். ஒரு சில வரலாறுகளில் கோலி நாட்டுத் தண்டபாணி (சுப்பிரபுத்தரின் சகோதரர்) என்பவரின் மகள் கோபாவைச் சித்தார்த்தன் மணந்து கொண்ட தாகக் காணப் பெறுகின்றது. ஆயினும், பெரும்பாலான வரலாறுகள் யசோ தரையின் பெயரையே கூறுவதால், அவள் ஒருத்தியே சித்தார்த்தனின் மனைவி என்று கொள்ளலாம். யசோதரையே முன்னால் பல பிறவிகளிலும் தமக்கு மனைவியாக விளங்கினாள் என்று புத்தர் பெருமானே பிற்காலத்தில் அறிவித்துள்ளார்.

காதல் வலை

சித்தார்த்தனுக்கு ஏற்ற பேரெழிலுள்ள வாழ்க்கைத் துணைவி வாய்த்து விட்டாள். யசோதரையின் அழகும், குணங்களும், பணிசெய்யும் பண்பும் அவனைப் பரவசப்படுத்தி வந்தன. யாதொரு விகாரமுமில்லாத சுந்தரிகள் பலர் பணிப்பெண்களாக அமர்ந்திருந்தனர். கலைகளிலே