பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் நீங்கு படலம் ⚫ 77

இத்தகைய கருத்துக்களைப் பற்றியெல்லாம் சிந்தனை செய்கையில் சித்தார்த்தருடைய வீரியம், இளமை, வாழ்க்கை ஆகியவற்றால் ஏற்பட்டிருந்த களிப்பெல்லாம் ஒரே கணத்தில் மறைந்து போய்விட்டது.

அவருக்கு எக்களிப்பு இல்லை, துயரமும் அவரை விட்டு அகன்றுவிட்டது. தயக்கமோ, குழப்பமோ இன்றி, அவர் சிந்தனை நேராகச் சென்று கொண்டிருந்தது. விருப்பும் வெறுப்பும் அவர் உள்ளத்தைவிட்டு வெளியேறிவிட்டன. அறிவின் கதிர்களால் அவர் முகம் ஒளி மயமாகத் திகழ்ந்தது.

அந்த நேரத்தில் காவியுடை அணிந்த துறவி ஒருவர் வேறு எவரும் அறியா வண்ணம், மெதுவாக வந்து அவர் முன்பு தோன்றினார்.

சித்தார்த்தர் : தாங்கள் யார் ?

துறவி : நான் ஒரு சிரமணன். முதுமை, நோய், மரணம் ஆகியவை பற்றி மனம் வருந்தி, முக்தி வழியை நாடி நான் என் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். எல்லாப் பொருள்களும் அழிவை நோக்கியே விரைந்து செல்கின்றன; உண்மை ஒன்று தான் எக்காலத்தும் நிலைத்து நிற்கின்றது. ஒவ்வொரு பொருளும் மாறி விடுகின்றது; எதுவும் நிலையாத இவ்வுலகில் புத்தர்களின் உபதேசங்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. அழிவில்லாத ஆனந்தத்தை நான் நாடுகிறேன்; அதுவே பெயராத பெருஞ் செல்வம்; அதுவே ஆரம்பமும் அந்தமும் இல்லாத அழியா வாழ்வு. ஆதலால் உலகப் பற்றுள்ள என் சிந்தனையை யெல்லாம் அழித்துவிட்டேன். மக்களின் அரவமில்லாத ஒரு குகையிலே நான் ஏகாந்தத்தில் ஒதுங்கியுள்ளேன்; உணவுக்காகப் பிச்சையெடுத்துக்