பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 ⚫ போதி மாதவன்

துடன் தேவியின் காற்சிலம்புகள் கழன்று விழுந்தன; கைக் காப்புக்களும் தறிப்புண்டு சிதறின.

சித்தார்த்தர் அவளுக்கு ஆறுதல் கூறினார். அவள் கனவுகளிலே கண்ட செய்திகள் நன்னிமித்தங்களே என்று எடுத்துக் காட்டினார். ஆனால் யசோதரை சாந்தியடை யாமல், ‘என் அன்பே! நகருக்கு வெளியே ஓடிவிட்ட காளை அங்கிருந்து கொண்டே உறுமிய ஒலி என் உள்ளத்தைக் கலக்கி விட்டது. மேலும், கோயிலின் கொடி மரத்தில் ஆடிக் கொண்டிருந்த கொடி, காற்றில் வீசி யடித்ததும் பயங்கரமாயிருந்தது. காற்றிலே கலந்துவந்த அசரீரியின் ஒலி, “காலம் வந்துவிட்டது! காலம் வந்து விட்டது!” என்று உரக்க ஒலித்துக் கொண்டேயிருந்தது. இவையெல்லாம் எனக்கு ஏதோ ஆகாத காலம் என் பதையே அறிவுறுத்துவதாக அஞ்சுகிறேன்!’ என்று கூறினாள்.

ஆசைகளை அவித்து, லிருப்பு வெறுப்புக்களைக் களைந்து, எல்லா உயிர்களிடத்தும் சமமாகக் கருணை பொழிந்து கொண்டிருந்த நிலையில் சித்தார்த்தர் தம் அருகே வாடித் துடித்துக் கொண்டிருந்த அருமைக் காதலிக்கு இயன்றவரை ஆறுதல் கூறினார். ‘உலகில் நான் அறியாத இடங்களில் எங்கெல்லாமோ சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அனைவரையும், மற்ற உயிர்களையும் என் உற்றார் உறவினராக நினைத்து யான் அன்பு செலுத்துகிறேன். இந்த நிலையில், இத்தனை நாளும் ஒரே உயிர் போல் என்னுடன் வாழ்ந்து வந்த உன்னிடத்தும் எனக்கு அளவற்ற அன்பு உண்டு. சில நாட்களர்க எல்லோருடைய துக்கத்தையும் மாற்றுவதற்கு உரிய வழியைப் பற்றிய சிந்தனையிலேயே நான் ஆழ்ந்திருக்கிறேன். காலம் வரும்போது என் கருத்தும் கை கூடும். எல்லோர்க்குமாக நான் தேடுவது முக்கியமாக உனக்கும் பயன்படும். நீ கண்ட கனவுகள் எதிர்கால