பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் நீங்கு படலம் ⚫ 93

தூசியோ பனியோ அவர் மீது பட்டுவிடாமலும், வெப்பமும் குளிர்ச்சியும் உடலைத் தாக்கி விடாமலும் அந்தக் கவிகை அவரைப் பாதுகாத்து வந்ததாகவும், அவர் வசிப்பதற்காக மூன்று அரண்மனைகள் தனியாக அமைக்கப் பெற்றிருந்ததாகவும், வேலையாட்களுக்கும் அடிமைகளுக்கும் மற்ற மாளிகைகளில் குறுணையும் கஞ்சியும் கொடுத்து வந்தது போலன்றி, மன்னரின் அரண்மனையில் அவர்களுக்கு நல்ல அன்னமும் இறைச்சியும் அளித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ள சில வாக்கியங்கள் ‘அங்குத்தர நிகாய’த்தில் இருக்கிறன.

துறவைப் பற்ற அந்த நூலிலுள்ள குறிப்புக்களில் சித்தார்த்தர் கிழவன், பிணியாளன், மரித்தவன், துறவி ஆகியோரைச் சந்தித்த விவரங்கள் இல்லை. மனிதன் முதுமையும், நோயும், மரணமும் தனக்கு இயல்பா யிருக்கையில், அந்நிலைமைகளை அடைந்த மற்றவர்களைப் பார்க்கும் போது வெறுப்பும், வேதனையும் வெட்கமும் அடைவது முறையில்லை என்று மட்டும் அவர் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

‘மஜ்ஜிம நிகாயம்-அரிய பரியேசன சூத்திர’த்தில் பின்கண்ட விவரம் உள்ளது:

‘ஓ சீடர்களே! நான் போதியடைவதற்கு முன்னால், மெய்ஞ்ஞானம் பெறாமல் போதிசத்துவராக இருந்த காலையில், நானே மீண்டும் பிறவியெடுக்கும் நிலையிலிருந்ததால், பிறப்பின் தன்மையை ஆராய முயன்றேன்; நானே முதுமையடையக் கூடியவனானதால், முதுமையின் தன்மையை ஆராய்ந்தேன்; இவற்றைப் போலவே, பிணி, மரணம், துன்பம் பாவம் ஆகியவற்றையும் ஆராய நேர்ந்தது. அப்பொழுது, “பிறப்பு, முதுமை, பிணி, மரணம்,