பக்கம்:பௌத்த தருமம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

பெளத்த தருமம்



நாம் முன்னிரவில் எரிந்த சுடரே பின்னிரவிலும் எரிவதாக எண்ணுவது வழக்கம் , இது மன நினைப்பே தவிர உண்மையில்லை. ஒரு விளக்கில் சுடருக்குப் பின் சுடராக வெகு வேகமாகத் தொடர்ந்து தோன்றுகின்றன. ஒன்று அவியவும் மற்றொன்று தோன்றவும் இடைவெளியான நோமில்லை. இதைத் ‘தீப சந்தானம்’ என்பர். ஏனெனில் முதற் சுடரின் சந்தானமாகவே அடுத்த சுடரும், அதன் சந்தானமாகவே அதற்கடுத்த சுடரும், இவ்வாறே எல்லாச் சுடர்களும் சந்தானமாகவே தோன்றுகின்றன. முதற் சுடர் இரண்டாவது சுடருக்குக் காரணமே தவிர, அது வேறு. இது வேறு என்றாவதுபோல, மற்றைச் சுடர்களையும் கொள்ளவேண்டும்.

மனித உடலுக்குத் தபசந்தானத்தை உவமையாகக் கூறியிருப்பதுபோல், வாயு(காற்று) சந்தானம், தாரா (நீரோட்டம்) சந்தானம் முதலியவற்றையும் கூறுவதுண்டு. க ந் த ங் க ள் யாவும் இவ்வாறு சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழிபவை. அவைகளில் விஞ்ஞானம் என்ற உணர்வு தோன்றி அழிகையில், முற்கணத்திலே அழியும் ஞானத்தில் தோன்றிய வாச னை பிற்கனத்திலே தோன்றும் ஞானத்தில் பற்றிக்கொண்டு சந்தானமாக விளங்குவதால், அறிவு தொடர்ச்சியாக நிகழ்கின்றது. இதுபோலவே ஒரு பிறவியிலிருந்து மறு பி ற வி ஏற்படுதலும் ஒன்றின் காரணமாக மற்றது தோன்று கிறது; இதிலே காரணம் என்பது கருமபலன். ஓர் உயிர், ஒரு கூட்டைவிட்டு 'மற்றொரு கூட்டினை. அடைவது போன்றதன்று இப்பிறவித் தொடர். ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/101&oldid=1386933" இலிருந்து மீள்விக்கப்பட்டது