பக்கம்:பௌத்த தருமம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

பெளத்த தருமம்


 வெளித் தோற்றத்திலே, இதைப் பார்த்தவுடன், முற்பிறப்பில் வினைகள் செய்பவன் ஒருவன், அவற்றின் பயன்களை இப்பிறப்பில் அநுபவிப்பவன் வேறொருவன் என்பதுபோல் தோன்றும். ஆழ்ந்து சிந்தித்தால், இருவருடைய தொடர்பும் விளங்கும். முன்னவன் இல்லாவிட்டால், பின்னவன் தோன்றி யிரான்; பின்னவன் முன்னவனா யில்லாவிட்டாலும், அவனிலிருந்து முற்றிலும் வேறுபட்டவனல்லன்.

‘ஹே து’ நிகழ்ச்சி என்ற காரண - காரியத் தொடர்பு, குறித்த முறையில், குறித்த விதிப்படி நிகழ்ந்து கொண்டே யிருக்கின்றது; பூதங்களின் (தாதுக்கள் அல்லது மூ ல ப் பொ ரு ள் க ளி ன்) தொடர்பும் தரும சந்ததி' என்ற விதிப்படி நிகழ்ந்து கொண்டே யிருக்கின்றது.

தற்காலத்து விஞ்ஞானிகளும், உலகில் எதுவும் நிலையாயில்லை என்றும், எல்லாம் எப்போதும் மாறிக் கொண்டே நிலையற்றிருக்கின்றன ( everything is flux, movement, change) எனறும் கூறுகின்றனர்.

இந்நிலையில் ‘நான்’ என்று மனிதன் கருதுவது எதை என்று காணுதல் எளிது. உடலும் மனமும் கணந்தோறும் மாறிவரினும், அ. வ ற் றி ல் ஒரு தொடர்பும் இருக்கின்றது. முந்திய நினைவுகள், உணர்ச்சிகள், கருத்துக்கள், ஆசாபாசங்கள் ஆகியவை ஒரே உடலை அடிப்படையாகக் கொண்டு தேங்கி நிற்பதே ‘நான்’ ' என்ற அ க ங் கா ர த் தி ற் கு அடிப்படை. இந்த அகங்காரமும் மாறக்கூடியதே. ஏனெனில், குழந்தைப் பருவத்தில் ஒருவன் தன்னை "நான் என்று குறிப்பிட்டு வந்தும், பினனால் வயோதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/103&oldid=1386920" இலிருந்து மீள்விக்கப்பட்டது