பக்கம்:பௌத்த தருமம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பெளத்த தருமம் புத்தரிடமிருந்து அபூர்வமாக வெளிவந்த ஒளித் துளிகள் போன்ற இத்தகைய வாக்கியங்களிலிருந்தே நாம் அவர் கருத்தை அறிந்துகொள்ள வேண்டி யிருக்கிறது. இவை போன்ற கருத்துக்களைக் கொண்டும், தருமநியதி, பிறப்பின் தொடர்ச்சியான வேறு பிறவிகள், புண்ணியம், பாவம் ஆகியவை பற்றிய கருத்துக்களைக் கொண்டும், புத்தரை வெறும் பெளதிகவாதி அ ல் ல து பொருளியல் வாதி (materialist) என்று கூற இயலாது. அவர் வெறும் பொருளியல் வாதியே என்றும். ஏதோ மக்களுக்கும் மன்னர்களுக்கும் விருப்பு ஏற்படுவதற்காகத் தமது கொள்கையைத் தருமம்' என்ற பெயரால் உயர்த்திக் கொண்டு, வேறு சில உவப்பான கொள்கைகளையும் சேர்த்துக் கொண்டார் என்றும் சிலர் கூறுவர். இத்தகைய கூற்றை ஒப்புக்கொண்டால், புத்தர் காட்டும் விடுதலையாகிய நிருவானம் பொருளற்ற தாகிவிடும். மனித வாழ்க்கையின் முடிவு ஒருபிடி சாம்பல்தான் என்ருகிவிடும். புத்தர் அத்தகைய கொள்கையுடையவர் அல்லர் என்பது, ஆயிரக்கணக கான ஆண்டுகளாக உலகிலே பலகோடி மக்கள் அவருடைய தருமத்தில் ஆறுதல் பெற்று உய்ந்து வந்ததிலிருந்தும், அவருடைய உபதேசங்களி லிருந்தும் தெரியவரும். பெளத்த தருமத்தைப் பற்றிப் பிக்கு சுபத்ரா எழுதியுள்ள கீழ்க்கண்ட வாக்கியங்கள் அதன் தனிப் பண்புகளை விளக்குவனவாக இருக்கின்றன: ஒரு தனி நபராக இறைவனை வருவித்துக் கொள்ளாமலே பூரணமான நன்மையும் ஞானமும் பெறும் வழியைப் பெளத்த தருமம் போதிக்கின்றது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/123&oldid=848867" இலிருந்து மீள்விக்கப்பட்டது