பக்கம்:பௌத்த தருமம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

பெளத்த தருமம்



'காமம், குரோதம், மயக்கம் ஆகியவற்றை அழித்தலே (கந்தங்களின்) சேர்க்கையா யில்லாத நிலை’ என்றும் பகவர் அருளியுள்ளார்.

மற்றோரிடத்தில் பகவர் இவ்வாறு கூறியுள்ளார்:

'(பிறரைச் சார்ந்து நிற்பவனிடம் சலனம் (உறுதியின்மை) இருக்கின்றது, சுதந்திரமாக உள்ளவனிடம் சலனமில்லை. சலனம் எங்கே யில்லையோ, அங்கே அமைதி உண்டு. அமைதி எங்கே உளதோ, அங்கே (மோகம் முதலிய வெறிகள் சம்பந்தமான) இன்பம் துய்க்கும் களியாட்டமில்லை. இன்பவேட்டை எங்கேயில்லையோ, அங்கே (பிறப்பு இறப்பாகிய) வருதலும் போதலும் இல்லை. வருதலும் போதலும் எங்கே யில்லையோ, அங்கே ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதலும் இல்லை. ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல் எங்கே யில்லையோ, அங்கே "இங்கு" என்ப தில்லை, "அப்பால்" என்பதில்லை, "இங்கும் - அங்கும்" என்பது மில்லை. அதுவே துக்கத்தின் முடிவு? **

அறப் படை வீரர்கள்

திரு. பால் கேரஸ் எழுதிய ' புத்தருடைய சுவிசேடம் (The Gospel of Buddha)' என்ற நூலில் கீழ்க்கண்ட மேற்கோள் ஒன்றைக் குறித்துள்ளார். இதில் நிருவாணம் தருமராஜ்யத்தின் தலை நகர் என்று அழகிய முறையில் கூறப்பட்டுளது:

'ததாகதர் வல்லமை மிக்க ஓர் அரசரைப் போலத் தமது இராஜ்யத்தை நீதியுடன் ஆண்டு வருகிறார். ஆனால் பொறாமை மிக்க பகைவர்கள் வந்து தாக்குவதால், அவர் தம் பகைவர்கள் மீது போர் தொடுக்கச் செல்கிறார். அரசர் தம் படைவீரர்கள்


  • 'சுத்த நிபாதம்.'
    • 'உதானம்'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/151&oldid=1386786" இலிருந்து மீள்விக்கப்பட்டது