பக்கம்:பௌத்த தருமம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தத் திருமுறைகள்

219


 'பெளத்தம்', ‘பெளத்த இந்தியா’ ஆகிய ஆங்கில நூல்கள் மிகவும் பிரசித்தமானவை. அவருடைய மனைவியார் அவருடைய இலக்கிய சேவையில் பங்கு கொண்டிருந்ததுடன், தாமும் பல நூல்கள், கட்டுரை களை வெளியிட்டு வந்தார். தேர காதை', ‘தேரி காதை’ இரண்டையும் அவர் இனிய செஞ்சொல் நிறைந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். பர்னோப் சமஸ்கிருத நூல்களை ஆராய்ந்து வெளியிட்டதுடன், ‘சுத்த நிபாதம்’ போன்ற நூல்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். 1877 முதல் 1897 வரை ஆர்வத்தோடு உழைத்துப் புத்த ஜாதகக் கதைகளை அவர் ஆறு பெரிய தொகுதிகளாக வெளியிட்டார்.

ஹெர்மான் ஒல்டன்பர்க் வடமொழியில் மகா விற்பன்னர் வைதிக நூல்களில் அவர் முழுத் தேர்ச்சி பெற்றவர். விநய பிடகம் முழுவதையும் அவர் பதிப்பித்தார். ‘பாதி மொக்கம்’', "மகா வக்கம்", 'சுள்ள வக்கம்' ஆகிய நூல்களை, ரைஸ் டேவிட்ஸ் அவர்களுடன் சேர்ந்து, அவர் ஆங்கிலத்தில் எழுதினார். ஜெர்மன் மொழியில் அவர் எழுதிய புத்தர் வரலாறு (The Buddha) 1882-ல் ஆங்கிலத்திலும் வெளி வந்தது. ‘ஜாதகமாலை’', 'சத்தர்ம புண்டரிகம்' என்ற இரண்டு வடமொழி நூல்களையும் பேராசிரியர் கெர்ன் 1891-ல் ஆராய்ந்து பதிப்பித்தார். பிரெஞ்சுப் பேராசிரியர் ஸில்வெயின் லெவி சமஸ்கிருதப் பெளத்த நூல்களை வெளியிடுவதில் அளவற்ற சேவை புரிந்தவர். அவர் சீன மொழி, திபேத்திய மொழி ஆகியவற்றிலும் பண்டிதர். பன் மொழிப் பாண்டித்தியம் பெற்றிருந்ததால், பதிப்பு வேலையிலும், மொழிபெயர்ப்பிலும் அவர் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தப்பெற்றது. ரஷ்ய ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/226&oldid=1386787" இலிருந்து மீள்விக்கப்பட்டது