பக்கம்:பௌத்த தருமம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

57


வேண்டிய பெரும் பொறுப்பை நிறைவேற்றவேண்டியிருப்பதால், அதற்குரிய சீலங்கள் யாவையும் அவன் போற்றிவருவான். செருக்கும், சினமும், சிறுமையும், அழுக்காறு, அவா, இன்னாச் சொல் முதலியவைகளும் நீங்கி, அவன் உள்ளம் பரிசுத்தமாயிருக்கும். தெளிவான காட்சியாலும், உயர்ந்த விஷயங்களில் உறுதியுடன் கொள்ளும் ஆர்வத்தாலும்,

'கருமருவு குகையனைய
காயத்தின் நடுவுள்
களிம்பு தோய் செம்பனைய...'*

உள்ளங்கூட மாற்று மதிக்கமுடியாத பசும்பொன்னாவிடும். தானே தனக்கு உதவி என்றும், தான் சரணடையக்கூடிய இடம் தன்னைத் தவிர வெளியிலே எங்குமில்லை என்றும் பெளத்த உபாசகன் முழு நம்பிககை கொண்டிருப்பான். அதனாலேயே அவனுக்குக் கடைத்தேற்றம் உறுதி.

'நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும்,-நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும தான்.'

தன்னைச் செம்மைப் படுத்திக் கொண்ட ஒருவனின் உள்ளம் பரிசுத்தமா யிருக்கும். பரிசுத்தம் பயத்தை ஒழிக்கும், முகத்தை மலரச் செய்யும், சொல்லை இனிமையாக்கும், செயலை நெறிப்படுத்தும், அளவற்ற வலிமையை அளிக்கும், அன்பை விரிவடையச் செய்யும். அன்பு விரிவாகி விரிவாகி உயிர்கள் அனைத்தையுமே அனைத்துக் கொள்ளும். அந்த நிலையிலே, நல்லூற்றத்தில் நிலைத்துள்ள


  • தாயுமானவர் † நாலடியார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/62&oldid=1386951" இலிருந்து மீள்விக்கப்பட்டது