பக்கம்:பௌத்த தருமம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெளத்த தருமம் _ - --- - - ஒருவன் விரும்பக்கூடிய இனிய நிலையைப்பற்றிப் போதிசாரியாவதாரம்' என்ற நூலில் ஒர் அரிய வசனம் காணப்படுகின்றது. அது வருமாறு: நோயாளருக்கு கான் நன் மருந்தாகப் பயன்பட வேண்டும்; நோய் மறுபடி வராமலிருக்கும் வரை. அவர் எளுக்கு நான் மருத்துவஞகவும், ஊழியக்காாளுகவும் இருந்து வர வேண்டும், உண்னும் உண்டிகளையும் பருகும் பானங்களையும் மழையாகப் பொழிச்து பசி, காகங்களாகிய துயரத்தை நான் கணிக்க வேண்டும்......என் செல்வ மெல்லாம் ஏழைகளுக்கு உரிமையா யிருக்கட்டும்; அவர்க ளுடைய தேவைகளுக்கு நான் பல வழிகளிலும் கொண்டு புரிந்து வரவேண்டும். என்னையும், என் இன்பங்களையும். முற்பிறவியிலும், இப்பிறவியிலும், இனிவரும் பிறவியிலும் நான் செய்யும் புண்ணியங்களையும் நான் மன அமைதியோடு தத்தம் செய்கிறேன்-அசனுல் எல்லா உயிர்களும் தத்தம் இலட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக...என்னை நிக்கிப்பவர்கள், எனக்குக் சீமை செய்பவர்கள், என்னை எளனம் செய்பவர்கள் யாவரும் போதியடைவார்களாக. பாதுகாப்பற்றவர்களுக்கு கான் பாதுகாப்பாளனயும், வழிப் போக்கர்களுக்கு வழிகாட்டியாயும், ஆற்றின் மறுகரையாகிய நிருவானத்தை அடைய விரும்புவோர்க்குக் கப்பலாயும். அணையாயும், பாலமாயும் விளங்குவேன். (வழியிலே) ஒளி வேண்டுவோர்க்கு நான் பேமாயும், சயனிக்க அமளி விரும்பு வோர்க்கு அமளியாயும், குற்வேல் புரிய அடிமை தேவையாயுள்ளவர்களுக் கெல்லாம் நான் அடிமையாயும் விளங்குவேன்...' நல்வாய்மை: சத்தியமான வசனமே நல் வாய்மை. 'பொய்யுரையிலிருந்தும், பு ற ங் கூ று வதிலிருந்தும், நிந்தைப் பேச்சிலிருந்தும், பயனற்ற சோம்பேறிப் பேச்சிலிருந்தும் ஒதுங்கியிருத்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/63&oldid=849187" இலிருந்து மீள்விக்கப்பட்டது