பக்கம்:பௌத்த தருமம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

67


அவன் அவ்வாறே செய்கிறான். ஏற்கனவே எழுந்துள்ள நல்ல நிலைமைகள் நிலைபெறுவதற்காகவும் அவை பழுதாவதைத் தடுப்பதற்காகவும், அவை பெருகும்படி செய்வதற்காகவும், அவைகளைப் பழக்கப்படுத்திப் பயன் பெறுவதற்காகவும் அவன் அவ்வாறே செய்கிறான்.’

செம்பு, பித்தளைகளில் களிம்பு பற்றாமல் தினமும் அவைகளைக் கவனமாக விளக்கச் சொல்லுவது போல, உள்ளத்தையும் விளக்கி வரவேண்டும் என்பதற்காகப் புத்தர் அதற்குரிய முறைகளைக் கூறியுள்ளார். தீய எண்ணங்கள் முளைத்து மேல்வராமல் முன்கூட்டியே உள்ளத்தைக் காத்து வரவேண்டும் என்றும், முன்னால் முளைத்துள்ள தீய எண்ணங்களை அழித்துவரவேண்டும் என்றும் அவர் முதற்படியை விளக்கியுள்ளார். இரண்டாம் படியாகிய நல்லெண்ணங்கள் முளைவிட்டு மேல்வருவதற்குரிய பக்குவத்தில் உள்ளத்தைப் பண்படுத்தி வரவேண்டும் என்றும், முன்கூட்டி முளைத்துள்ள நல்லெண்ணங்களாகிய முளைகள் கருகிவிடாமல் கருத்தோடு வளர்த்து வரவேண்டும் என்றும் அவர் காட்டியுள்ளார். மனத்திலுள்ள தீய எண்ணங்களை அழித்து, அவை மீண்டும் தோன்றாமல் காத்து வருவதோடு நின்று விட்டால், ஒரு பயனும் கிடைக்காது; தீயவைகளுக்குப் பதிலாக நல்லெண்ணங்களை வளர்க்கவேண்டும். ஏனெனில் மனம் ஒருபோதும் ஒன்றுமில்லாமல் வெறுமையாக இருப்பதில்லை, அதில் ஏதாவது ஒன்று முளை விட்டுக்கொண்டேயிருக்கும், புலன்களின் மூலம் ஏற்படும் அநுபவங்களால் உள்ளத்தில் புதுப் புது எண்ணங்கள் முளைத்துக்கொண்டேயிருப்பது இயல்பு. புலன்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/72&oldid=1387060" இலிருந்து மீள்விக்கப்பட்டது