பக்கம்:பௌத்த தருமம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படைக் கொள்கைகள்

91


யிருந்தால், அவர் கருத்தை அறிவதில் இடர்ப்பாடு அதிகமிராது. ஆனால் அவர், ஒவ்வொரு மனிதனும் தன் பாவ புண்ணியங்களுக்குப் பொறுப்பானவன் என்றும், அவைகளுக்குத் தக்கபடி அவன் வேறு பி ற வி க ள் எடுக்க நேரும் என்றும், செய்கையின் பயனான கருமத் தொகுதியைக் கரும விதியின்படி அவன் பின்னால் அநுபவித்துத் தீர வேண்டும் என்றும் கூறியிருப்பதால், அறிஞர்களுக்குள்ளே கூட அநான்மக் கொள்கையைப் பற்றிய இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளது. 'அழிவற்ற ஆன்மா இல்லை என்றால், எது மறுபிறப்பு எடுத்து வருகின்றது?' என்று கேள்வி கேட்கப் படுகின்றது. இந்த இடத்தில், இந்துக்கள் கொண்டுள்ள கரும நியதிக்கும் புத்தர் கூறியுள்ள கரும நியதிக்கும் வேற்றுமையுண்டு என்பதையும், இந்துக்கள் கருதும் மறுபிறப்பு, அல்லது புனர் ஜன்மத்திற்கும், புத்தர் கூறியுள்ள மறுபிறப்புக்கும் வேற்றுமையுண்டு என்பதையும் நாம் நினைவிலே வைத்துக்கொள்ள வேண்டும், முன்னதாக நம் ம ன த் தி லே ஊறிப் போயிருக்கும் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துக்கொண்டு, புத்தர்பிரான் கூறிய பல விஷயங்களையும் நிதானமாக ஆராய்ந்து பார்த்தால்தான், அவைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் உயிர்களும் ஐந்து கந்தங்களின் சேர்க்கை அல்லது ஈட்டமாக அமைந்தவை. உருவம், நுகர்ச்சி, குறி, பாவனை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/96&oldid=1386918" இலிருந்து மீள்விக்கப்பட்டது