பக்கம்:பௌத்த தருமம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படைக் கொள்கைகள்

93


சாதாரணமாக ஜடப் பொருள்கள் என்று சொல்லக் கூடியவையும், உயிர்த் தாதுக்கள், அல்லது உயிர் சக்திகளும் ( life-elements or forces ) கலந்திருக்கின்றன. அவைகளை நாம - ரூபங்களுக்குக் காரணமாகிய ஜடமும் மனமும் என்று பெளத்த நூல்கள் குறிக்கும். இவை இரண்டிலும் ஆன்மா அல்லது நிலையான உயிர் என்று கருதத்தக்கது எதுவுமில்லை.

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் காரணமும் துணையான நிலைமைகளும் அமைந்திருக்க வேண்டும் என்பதைப் பிரகித்ய சமுத்பாதத்தின் மூலம் பெளத்த தருமம் விளக்கிக் கூறுகின்றது. ஒரு வித்திலிருந்து முளை வெளி வருவதை எடுத்துக் கொள்வோம். முளைக்கு முதல் காரணமாயுள்ளது வித்து; முளை வருவதற்குத் துணையாயுள்ள நிலைமைகளான மண், நீர், வெப்பம், காற்று, ஆகாயம், காலம் ஆகியவை துணைக்காரணம். வித்தும் முளையும் வெவ்வேறு பொருள்கள், எனினும் ஒன்றுக்கொன்று காரணமாக அமைந்துள்ளன. காரணமும் துணைகளும் பொருந்திச் சேரும்பொழுது காரியம் நிகழ்கின்றது.

எந்த மாறுதலும் தானாக ஏற்படுவதில்லை. உலகில் ஏற்படும் மாறுதல்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று காரணமாகக் கொண்டவை. உலகப் பொருள்களிடையேயுள்ள இந்தக் காரண சம்பந்தமே (Causal nexus) பிரதித்ய சமுத்பாதம். உலகப் பொருள்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக மாறுவதற்கு எப்பொழுது ஆரம்பித்தன, எப்பொழுது இந்த மாற்றம் நிற்கும் என்பவற்றை யாரும் உரைக்க முடியாது. ஆனால் ஒன்றுமட்டும் சொல்லலாம் : காரணம் இல்லாவிட்டால், காரியம் நிகழாது. புத்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/98&oldid=1386923" இலிருந்து மீள்விக்கப்பட்டது