பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I0 வந்தவர் எல்லாரும் தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டவரே. சுமார் முப்பது பேர் கூடிவிட்டனர். கூட்டம் தொடங்கியது. 'சுதேசமித்திரன்' ஆசிரியர். சி. ஆர். சீனிவாசன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். அவர் பாரதியை நன்கு அறிந்தவர்; நேரில் பழகியவர். ஆதலினலே பாரதியாரைப் பற்றி எல்லாருக்கும் எடுத்துக் கூறினர் அவர். அப்போது பாரதியின் படம் ஏதும் இல்லை. ஆகவே, பாரதியின் தோற்றம் எப்படியிருந்தது என்று எடுத்துக் கூறினர் அவர். பாரதியை நன்கு அறிந்தவர் இன்ைெருவர். அவர்தான் ஹரி ஹ ரச மா என்பவர். "பாரதி பிரசுராலய"த்தின் சார்பிலே பாரதி நூல்களை வெளியிட்டு வந்தார் அவர். அவரும் கூட்டத்தில் பேசினர். ஆக, அன்றைய கூட்டத்தில் எல்லாரும் வலியுறுத்திய விஷயம் ஒன்றே. அதாவது, பாரதியாரைப்பற்றிய உண்மையான தகவல் கொண்ட நூல் ஒன்று வெளிவர வேண்டும் என்பதே. அந்தக் காலத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியைப் பற்றி அறிந்தவர் சிலரே. அச்சிலர் எவர்? தேசியப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், அவரும் என்ன அறிந் தனர்? பாரதி பாடல்கள் சிலவற்றையே அறிந்தனர். அந்த தேசியப் பாடல்களைப் பாடியவர் பாரதியார் என்கிற அளவில்தான் அறிந்திருந்தனர். அதற்குமேல் அறிந்தார் இலர். "உங்களுக்கு கப்பிரமணிய பாரதியைத் தெரியுமோ?" என்று கேட்டால் பலர் என்ன சொல்வர்?