பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவம் ஆகியோர் மீது அரசாங்கம் வழக்குத் தொடுத்தது அல்லவா? அப்போது அந்த வழக்கிலே போலீஸ் பக்கம் சாட்சியாகப் பேசினர் ஒரு போலீஸ்காரர். சுப்பிரமணிய சிவத்தைப் பற்றி மிக இழிவான முறையில் அவர் சாட்சி கூறினர். கேட்டார் பாரதியார்; கோபம் கொண்டார். அந்தப் போலீஸ்காரரைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதினர். "திருநெல்வேலியிலே ராஜ நிந்தனைக் கேசில் விசாரணை செய்யப்பட்டு வரும் பூரீ சுப்பிரமணிய சிவனுக்கு வயது 26க்கு மேல் ஆகவில்லை. இவர் சுமார் ஆறு வருஷங்களுக்கு முன் அதிபால்யத்திலேயே சிவகாசி சப்டிவிஷனல் ஆபீசிலே * முச்சி என்ற தணிந்த உத்தியோகம் பார்த்து வந்தாராம். ஆனால், சரீர செளக்யம் போதாது என்று இவரை அந்த வேலையிலிருந்து விலக்கி வி ட் டா ரீ க ளா ம் . இந்த விஷயத்தை திருநெல்வேலி போலீஸ் உத்தியோகஸ்தர்கள் சாr கூறும் சமயத்தில் இகழ்ச்சியோடு கூறுகிருர்கள் காலம் சென்ற ஜட்ஜ் முத்துசாமி ஐயர் பாலியத்திலே ஒரு கிராம கணக்குப் பிள்ளையிடம் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் சம்பளத்தில் அமர்ந்ததன் பொருட்டு, இந்தப் போலீஸ்காரர்கள் அவரைப் பற்றித் தாழ்ந்த நோக்கம் கொண்டிருப்பார்கள் என்று சந்தேகிக்கிருேம். இது நிற்க. "இன்னுமொரு போலீஸ்காரர் பூரீ சிவன் தூத்துக் குடியிலே சிதம்பரம் பிள்ளையோடு ஒரே வீட்டில் வாசம் செய்து கொண்டிருந்தாரென்றும். இது வர்ணு சிரம தர்மத்துக்கு விரோதமென்றும், இதன் பொருட்டு பூரீ சிவன் ஜாதியினின்றும் பகிஷ்காரம் செய்யப் படுவதற்குத் தகுதியுடையவராவர் என்றும் சொல்லியிருக்