பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 இந்தியர்களுக்குக் கிடையாது என்றும், இனி எக்காலத் திலும் வரப்போகிறதில்லை என்றும் சொல்லிச் சந்தோஷ மடைந்து கொண்டிருந்தவர்களுக் கெல்லாம் இப்போது விழி பிதுங்குகிறது. தொழில் நிறுத்தத்திலிருக்கும் தீரர் களிடம் இந்தியா முழுதும் அநுதாபம் கொண்டிருக்கிறது என்பதில் ஆக்ஷேபமில்லை." w (இந்தியா - 8 - 9 - 1906) கிழக்கிந்திய ரயில்வே தொழிலாளர், வேலை நிறுத்தி யிருந்த அதே சமயத்தில் மற்ருெரு வேலே நிறுத்தமும் நடை பெற்றது. அது என்ன? பம்பாய் தபால்காரர் வேலை நிறுத்தம். ரயில்வே தொழிலாளர் வேலே நிறுத்தம் பற்றி எழுதிய போது சற்று நிதானமாகவே எழுதினர் பாரதியார். காரசாரமான சொற்களைப் பெய்து எழுதின ரல்லர். ஆனல் கொள்கையைச் சிறிதும் விட்டுக் கொடுத் தாரல்லர்; தளர்த்தினுரல்லர். ஆனல், தபால்காரர் வேலை நிறுத்தத்தின் போது சிறிது காரசாரமாகவே எழுதினர் பாரதியார். 'முதலாளிகள் தொழிலாளிகளின் லாபத்தையும், சுகத்தையும் சிறிதேனும் பொருட்படுத்தாமல் கழுகுகள் போல தமது லாபத்தையே கருதி வேலையாட்களை வற்றடிக்கும் முறை இந்தியாவிலே அதிகரித்து விட்டது. நவீன நாகரிகத்திலே பண ஆசை ஒரு முக்கிய அம்ச மானதால் நமது நாட்டு முதலாளிகள் இந்த விஷயத்தில் மேல் நாட்டு முதலாளிகளின் முறையைப் பின்பற்று கிருர்கள். எனவே, தொழிலாளிகளும் மேல் நாட்டுத் தொழிலாளிகளின் மாதிரியைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள். முதலாளிகளிடமிருந்து தனது குறைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டாகு மால்ை மேல் நாட்டுத் தொழிலாளிகள் கூட்டம் கூடி