பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 பாரதியார் கடையத்தில் இருந்தபோதும் சுதேச மித்திரனுக்குக் கட்டுரை எழுதிவந்தார். மித்திரனும் பாரதிக்கு மாதம் முப்பது ரூபாய் அனுப்பிவந்தான். கடையத்திலிருந்து மேற்கு நோக்கி ஐந்து மைல் சென்ருல், அங்கே ஒரு சாஸ்தா கோவிலைக் காணலாம். அந்த சாஸ்தாவுக்கு பூசை செய்வார்கள் கடையம் வாழ் மக்கள். பூசை, ஆண்டுக்கு ஒரு முறைதான் நிகழும். பாரதியார் கடையத்தில் இருந்தபோது அந்த பூசை யும் நடந்தது. பாரதியார் தமது நண்பராகிய நாராயண பிள்ளையுடன் பூசை காணச் சென்ருர். பூசை முடிந்தபின் எல்லாரும் அங்கேயே சாப்பிடுவார் கள். இது வழக்கம். அந்த வழக்கப்படியே அப்போதும் நடந்தது. முதலில் பிராமணர் சாப்பிட்டனர். பின்னர் சைவப் பிள்ளைமார் சாப்பிட்டனர். பாரதியார் என்ன செய்தார்? பிராமண ருடன் சேர்ந்து சாப்பிட்டாரா? இல்லை. தமது நண்ப ராகிய நாராயணப் பிள்ளையுடன் சேர்ந்து உண்டார். கடையத்து பிராமணர்கள் இஃது அறிந்தார்கள்; கோபம் கொண்டார்கள்; பாரதியாரை ஜாதியிலிருந்து நீக்கிவைத்தார்கள். அவ்வளவில் நின்ருர்களா? இல்லை; இல்லை. மேலும் ஒரு படி சென்ருர்கள். 'பாரதியாருக்குச் சாப்பாடு போடக் கூடாது' என்று கட்டுப்பாடும் செய்தார்கள். மூன்றுநாள். சோறின்றிப் பட்டினி கிடந்தார் பாரதியார். அவர்தம் நிலை கண்டு இரக்கம் கொண்டான் குடியானவன் ஒருவன்; சோறு சமைத்துக் கொண்டுவந்து பாரதியாருக்குக் கொடுத்தான். ᎥᏝa