பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 எப்படியிருக்கிறது பாருங்கள் புதுச்சேரியிலே தான் கையில் காசில்லாமல் கஷ்டப்பட்டார் பாரதியார்: சில நாள் பட்டினியும் இருந்தார்: போதாது என்று போலீசாரின் தொல்லைகளுக்கும் ஆளார்ை. ஆனால் இங்கே என்ன? உறவினர் உறவினர் ஐயா! உறவினர். தனியொரு வனுக் குணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடிய கவிக்கு உணவு கொடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடு செய்தார்கள் இந்த உறவினர்கள்t "உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன் பிறந்தே கொல்லும் வியாதி' கடையத்தில் சில மாதங்கள் இருந்தார் பாரதியார்: அப்போது பற்பல முயற்சிகள் செய்தார். அம் முயற்சி எதுவும் பயன் தரவில்லை. அவ்விதம் பயன் தராது போன முயற்சிகளில் ஒன்றுதான் எட்டயபுரம் ஜமீந்தாரைப் பார்க்க முயன்றது. - ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு மே மாதம் இரண்டாந் தேதி எட்டயபுரம் ஜமீந்தாருக்கு 'ஒலைத் தூக்கு ஒன்று பாடி அனுப்பினர் பாரதியார். வெங்கடேசு ரெட்டப்ப பூபதி எனும் பெயர் கொண்ட அந்த ஜமீந்தார் பாரதியை நன்கு அறிந் தவர். பாரதியார் எட்டய புரத்தில் வாழ்ந்தபோது அவருடைய கவிகளேக் கேட்டு இன்புற்றுப் பாராட்டியவர்: அப்போது அவர் ஜமீந்தார் ஆகவில்லை: பின்னே ஜமீன் உரிமை ஏற்ருர். அத்தகைய ஒருவரிடமிருந்து உதவி கிடைக்காதா என்று கருதினர் பாரதியார். எனவே 'ஒலைத்துரக்கு பாடி, அனுப்பினர்.