பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 ஜமீந்தாரிடத்திலே பேசும்போது மேல் துணியை எடுத்து இடுப்பிலே கட்டிக் கொண்டு வணக்கமாக வாய் பொத்தி நிற்பார்கள். ஜமீந்தார் ஏதாவது கூறினல் அப்போது அடிக்கடி "மகாராஜா மகாராஜா என்று சொல்வார்கள். இப்படி ஜமீந்தாரிடத்திலே வணக்கமும், மரியாதை யும், நன்றியும் மிக்கவர்கள் எட்டயபுரத்துக் குடிமக்கள். எட்டயபுரம் ஜமீந்தாரைப்பற்றி நாம் ஒன்றும் சொல் வதற்கு இயலவில்லை. ஆனல் பாரதியாரே தாம் எழுதிய கதை ஒன்றில் ஒரு ஜமீந்தாரையும் அவரது திறமையை யும் படம் பிடித்துக் காட்டியிருக்கிரு.ரி. இத்தகைய எட்டயபுரத்திலேதான் பாரதியார் பிறந் தார். அதாவது ஆயிரத்து எண்ணுாற்று எண்பத்து இரண்டாம் ஆண்டு, டிசம்பர் மாதம் பதினேராம்தேதி. பாரதியாரின் தந்தையார் பெயர் சின்னச்சாமி ஐயர் என்பது. இவரது சொந்த ஊர் சீவலப்பேரி. கடுவாய் கப்பய்யர் என்பவரின் புதல்வர் சின்னச்சாமி ஐயர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். இவர். எனவே எட்டயபுரத்தில் குடியேறினர். சின்னச்சாமி ஐயர் கல்வி கேள்விகளில் சிறந்தவராக விளங்கினர். கணிதத்தில் வல்லவராகவும் இருந்தார். எனவே எட்டயபுரம் ஜமீனில் முக்கியமான பதவிபெற்ருர், நாளடைவில் ஜமீந்தாரின் அன்புக்கு உரியவரும் ஆளுர். பாரதியாரின் தாயார் பெயர் லக்ஷ்மி. பாரதிக்குப் பெற்ருேர் இட்ட பெயர் சுப்பிரமணியன் என்பது. அதாவது பாட்டனரின் பெயர். சுப்பையா