பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 1942ம் ஆண்டிலே வெள்ளையனே வெளியேறு' என்று முழக்கம் கொடுத்தார் மகாத்மாகாந்தி: நாடுமுழுவதும் எதிரொலி கொடுத்தது. அதற்கு முன்பே-முப்பத்தைந்து ஆண்டுகள் முன்பே -முதல் முழக்கம் செய்தார் பாரதி. ஆயிரம் உண்டு இங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? கேட்கிருர் பாரதி. நமக்குள்ளே சாதிகள் ஆயிரம் இருக்கலாம். அந்நியனுக்கு இங்கே என்ன வேலை? வெள்ளையன் வந்து புகுவது என்ன நீதி? ஆகவே, வெள்ளையனே! வெளியேறு என்று முழங்குகிருt. பாரதியின் கவிதாபீரங்கி எப்படி, முழங்குகிறது பாருங்கள்! ஆயிரத்துத் தொளாயிரத்து ஐந்தாம் ஆண்டிலே வங்காளத்தை இரண்டு துண்டாக்கினர் லார்டுகர்ஸான். இந்தத் துண்டிப்பை எதிர்த்து நாடு முழுவதும் கிளர்ச்சி நடைபெற்றது. வங்கப் பிரிவினை எதிர்ப்பும், சுதேசிக் கிளர்ச்சியும் வங்காளத்திலே பல பகுதிகளில் நடை பெற்றன. துண்டிக்கப்பட்ட வங்கத்தின் ஒரு பகுதி கிழக்கு வங்காளம். கிழக்கு வங்காளத்தின் முதல் கவர்னராக நியமனம் பெற்றவர் ஸர். பி. புல்லரி என்ற ஆங்கிலேயர். கிழக்கு வங்காளத்தில் தோன்றிய பிரிவினை எதிர்ப்பு இயக்கம், சுதேசிக் கிளர்ச்சி, வந்தே மாதர கோஷம் இவற்றையெல்லாம் அ ட க் க மு ய ன் மு ? இவர்: தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டார்! அடக்கு முறைக்கு ஒர் எல்லையில்லை; வெறிபிடித்துத் தலைவிரித்து ஆடினர் இவர்,