பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பிரிவினை இயக்கம் சுதேசி இயக்கம் ஆகியவற்றை வங்காளத்திலே முன்னின்று நடத்தியவர் கரேந்திரநாத் பானர்ஜி என்பவர். இவர் மிகச் சிறந்த நாவலர். ஆயிரத்துத் தொளாயிரத்து ஆரும் ஆண்டு, ஏப்ரல் மாதம் வங்க மாகாண சுதேசி மகா நாட்டை பாரிசாலில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் கரேந்திரநாத் பானர் ஜி. பாரிசால் என்பது கிழக்கு வங்காளத்திலே ஒரு ஜில்லா. அந்த சமயத்திலே இந்த ஜில்லா மாஜிஸ்ட் ரேட்டாக இருந்தவர் எமர்சன் என்பவர். அந்த ஜில்லா போலீஸ் அதிகாரியாக விளங்கியவர் கெம்ப் என்பவர். மகாநாடு நடப்பதற்குப் பல நாட்கள் முன்பிருந்தே மாணவர்கள் பிரச்சாரம் செய்யத் தெடங்கிவிட்டார்கள்; தெருத் தெருவாக ஊர்வலம் சென்ருர்கள்; வந்தே மாதரம் என்று முழங்கினர்கள்; கிராமங்கள் தோறும் சென்ருர்கள்; வந்தே மாதரம் என்று முழங்கினர்கள். தெருவிலே சுதேசிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், மற்ருெருவரைக் கண்டால் உடனே வந்தே மாதரம்" என்று உரக்கக் கூவினர்கள். இப்படியாக பாரிசால் பகுதியிலே எங்கும் சுதேசி உணர்ச்சி பொங்கி வழிந்தது, ஏப்ரல் மாதத்திலே மகாநாடும் கூடியது. கவர்னர் புல்லர் என்ன செய்தார்? ஜில்லா மாஜிஸ்ட் ரேட்டுக்கு சர்வாதிகாரம் கொடுத்தார். அந்த சர்வாதிகாரி என்ன செய்தார்: மகாநாட்டைக் கலைத்து விடுமாறு உத்தரவு பிறப் பித்தார். போலீஸ் அதிகாரி வந்தார். மகாநாட்டைக் கலைத்தார். எவரும் கலந்து செல்ல வில்லை. குண்டாந்தடி கொண்டு அடிக்கச் சொன்னர். மகாநாட்டுக்கு வந்திருந்த