பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፪37 பூஜை முடிந்தவுடனே போஜனம். பழையது தின்ன ஊரார் வீட்டுக் கறிகளெல்லாம் தருவித்த மனிதன், பகற் சோற்றுக்கு ஊரைச் கம்மா விடுவாளு? கிருஷ்ணய்யங்கார் வீட்டில் இருந்து 'உப்புச்சாறு', கேசவய்யர் வீட்டிலிருந்து 'அவியல்’, குமாரசாமிப்பிள்ளை வீட்டுக் "கீரைச் சுண்டல்: இன்னும் பலர் வீட்டிலிருந்து பலவித மாமிச பக்குவங்கள். இவ்வளவு கோலாகலத் துடன் ஒரு மட்டில் போஜனம் முடிவு பெறும். ராமசாமிக் கவுண்டரி, பார்ப்பார் சொல்லுவது போல, நல்ல போஜனப்பிரியன். மெலிந்த சரீரமுடைய ஒரு சிநேகிதனுக்கு அவர் பிரசங்கம் செய்ததாகச் சரித்திரங்கள் சொல்லுகின்றன. "இதோ பாரு, ரங்கா, நீயேன் மெலிஞ்சு மெலிஞ்சு போரே (போகிருய்) தெரியுமா? சரியாய் சாப்பிடவில்லை. சாப்பாடு சரியானபடிசெல்ல ஒருவழி சொல்கிறேன் கேளு. ஒரு கை நிறையச் சோறெடுத்தால் அதுதான் ஒரு கவளம். அப்படி நீ எத்தனை தின்பை? எட்டுக் கவளம், ரம்ப அதிகமாய்ப் போளுல் ஒன்பது கவளம் வைச்சுக்கோ. அவ்வளவுதான். சாஸ்திரப்படி முப்பத்திரண்டு கவளம் சாப்பிடவேணும். அதற்கு நீ என்ன செய்ய வேணு மென்ருல், இன்றைக்கு ஒன்பது கவளம் சாப்பிடுகிருயா? நாளைக்குப் பத்துக் கவளமாக்க வேணும். நாளன்றைக்குப் பதினொன்ருக்க வேணும். நாலா நாள் பன்னிரண்டு. இப்படி நாள்தோறும் ஒவ்வொன்ருக அதிகப்படுத்திக் கொண்டு போய் முப்பத்திரண்டுகளோடு நிறுத்தி விட வேணும். பிறகு ஒருபோதும் முப்பத்திரண்டு அவளத் திற்குக் குறையவே செய்யலாது." இந்த உபதேசம், மெலிந்த உடல் கொண்ட ரங்கனுக்கு எவ்வளவு பயன் பட்டதோ, அதனை அறிய