பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257 அப்படித் தானே இருக்கும்? அதை உத்தேசித்து அரையே மாகாணி வேலைதான் செய்தேன். இப்போது சின்னச் சங்கரனுடைய காதல் விஷயம் சொல்லப் போகிறேன். சிரத்தையுடன் படிக்கவேண்டும். தேசமாகிய உடலுக்கு வித்துவானே உயிர். ஒரு ஜாதி யாகிய கடிகாரத்திற்கு சாஸ்திரம் தேர்ந்தவனே வில். நாகரீகமாகிய கங்கா நதிக்குக் கவி'யின் உள்ளமே மூல ஊற்று. ஆகவே கவியின் "காதல் உலகமறியத் தக்கது. சின்னச் சங்கரன் தமிழ் தேசத்திலே ஒரு கவி. இருபது முப்பது வருஷங்களுக்கு முன் இந்த நாட்டில் கவிகளெல் லோரும் சின்னச் சங்கரன் மாதிரியாகத் தானிருந்தார்கள். இப்போதுதான் ஓரிரண்டு பேர் தமிழில் கொஞ்சம் சரியான பாட்டுக்கள் எழுதப்பட்டிருப்பதாகக் கேள்வி. அவர்களுடைய பெயர்கூட எனக்குத் தெரியாது. நான் தமிழ் தேசத்து பழக்கத்தைவிட்டு நெடு நாளாய்விட்டது. (இப்போது வட ஆப்பிரிக்காவிலிருக்கிறேன்.) ஆணுல் முப்பது வருஷங்களுக்கு முன் நான் தமிழ் நாட்டில் இருந்தபோது அங்கே சின்னச் சங்கரனுக்கு மேலே உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த கவி’ நான் பார்த்தது கிடையாது. தேசமோ உலகத்துக்குள்ளே ஏழை தேச மாச்சுதா? பதியிைரம் ரூபாயிருந்தால் அவன் தமிழ் நாட்டிலே கோடீசுரன். பத்து வேலி நிலமிருந்தால் அவன் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்டன். ஒரு ஜமீனிருந்து விட்டால், அவன் 'சந்திர வம்சம் சூரிய வம்சம் சனிகர வம்சம் மகாவிஷ்ணுவின் அவதாரம்.-பழைய பன்றி. அவதாரத்துக்குப் பக்கத்திலே சேர்க்க வேண்டியது. இந்த தேசத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களென கணக்குச் சொல்லுகிருர்கள். நான் நாலைந்து பேரைக்கூட பார்த்தது கிடையாது. அது எப்படி வேண்டுமென்ருலும் 17