பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 போகட்டும். ஆனால், இந்த முப்பத்து முக்கோடி தேவர் களிலே எனக்குத் தெரிந்தவரை நம்முடைய மகாவிஷ்ணு வுக்குத்தான் சிரமம் அதிகம். பன்றி விஷ்ணுவின் அவதாரம், ஆமை விஷ்ணுவின் அவதாரம். கவுண்டனூர் ஜமீந்தார் விஷ்ணுவின் அவதாரம். அன்னிபெஸண்ட் வளர்க்கிற (நாராயணய்யர் இடங்கொடாத) கிருஷ்ண மூர்த்தி பையன் அதே அவதாரம். மொத்தத்தில், மகாவிஷ்ணுவுக்குக் கஷ்டம் அதிகம். இப்படித் தெருவிலே கண்டவர்களை யெல்லாம் மூன்று காசுக்காகப் புக ழ் பாடுவது, பெண்களுடைய மூக்கைப் பார்த்தால் உருளைக் கிழங்கைப் போலிருக்கிறது. மோவாய் கட்டையைப் பார்த்தால் மாதுளம் பழத்தைப் போலிருக்கிறது. கிழவியுடைய மொட்டைத் தலையைப் பார்த்தால் திருப்பாற் கடலைப்போல் இருக்கிறது என்று திரும்பத் திரும்பக் காது புளித்துப் போகிற வரையில் வர்ணிப்பது: யமகம், திரிபு, பசு மூத்ரபந்தம், நாக பந்தம், ரத பந்தம், தீப்பந்தம் முதலிய யாருக்கும் அர்த்தமாகாத நிர்பந்தங்கள் கட்டி, அவற்றை மூடர்களிடம் காட்டி சமர்த்தனென்று மனுேராஜ்யம் செய்துக் கொள்வதுஇவைதான் அந்தக் காலத்திலே கவிராயர்கள் செய்த தொழில். கவுண்டனுரர் ஜமீந்தார் அவர்களின் அடைப்பைக் காரன், மந்திரி, நண்பன், ஸ்தல வித்வான் முதலியன வாகிய முத்திருளக் கவுண்டனுக்கு ஒரு பெண் உண்டு. வயது பதினறு. (இப்போதல்ல, சங்கரன் கதையிலே அவள் புகுந்த காலத்தில்.) நிறம் கருப்பு: நேர்த்தியான மைக் கருப்பு: பெரிய கண்கள், வெட்டுகிற புருவம்: அதிக ஸ்தூலமுமில்லாமல், மெலிந்து ஏணி போலவும் இல்லாமல், இலேசாக உருண்டு