பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 நடுத்தரமான உயரத்துடன், ஒழுங்காக அமைந்திருந்த சரீரம். படபடப்பான பேச்சு. எடுத்த வார்த்தைக் கெல்லாம் கலீரென்று சிரிக்கும் சிரிப்பு. மதுரைச் சீட்டிச் சேலை, டோரியா ரவிக்கை, நீலக் குங்குமப் பொட்டு, காதிலே வயிரத்தோடு, கழுத்திலே வயிர அட்டிகை, கையிலே வயிரக் காப்பு. நகையெல்லாம் வயிரத்திலே. மாணிக்கம் ஒன்றுகூடக் கிடையாது. மேனி முழுவதுமே நீலமணி. தலையைச் 'சொருக்கு'ப் போட்டு, அதில் ஜாதி மல்லிகைப்பூ வைத்துக் கொள்வதிலே பிரியமுடையவள். கொஞ்சம் குலுங்கிக் குலுங்கி நடப்பாள். காலில் மெட்டிகள் "டனிர் "டaர்' என்றடிக்கும். இவ்வளவு "ஷோக்"கான குட்டிக்குப் பெயர் அத்தனை நயமாக வைக்கவில்லை. 'இருளாயி' என்று பெயர் வைத்திருந் தார்கள். இவள் மேலே சங்கரனுக்குக் காதல் பிறந்துவிட்டது. சங்கரனை இதற்குமுன் சரியாக வர்ணித்திருக்கிறேனே இல்லையோ நேரே ஞாபகமில்லை. எனினும் இப்போது அவனுடைய காதல் கதை சொல்லத் தொடங்கும்போது மற்ருெரு முறை வர்ணனை எழுதியாக வேண்டியிருக்கிறது. கருப்பு நிறம். குள்ள வடிவம், மூன்று விரல் அகலம் நெற்றி. கூடு கட்டின நெஞ்சு. குழிந்த கண்கள், இரத்த மற்ற இதழ்கள். நெரிந்த தொண்டை. பின்னுகிற கால்கள். அரையிலே அழுக்கு மல் வேஷ்டி. மேலே ஒரு அழுக்கான பட்டுக்கரைத் துண்டு. இவ்வளவையும் மீறி கொஞ்சம் புதிதிக் கூர்மையுடையவன் போல் தோற்று விக்கும் முகம். இவ்விருவருக்குள்ளே காதல் எப்படி ஏற்பட்டதென் பதின் மூலங்கள் எனக்குத் தெரியாது. ரிஷி மூலம், நதி மூலம் விசாரிக்கப்படாது என்பார்கள்: அதாவது, சின்ன