பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 மற்றவை. வசனமோ சுத்த அபத்தம். இவன் தனக்குப் பின் தன் மந்தபுத்தி கவிதா ராஜ்யத்திற்கு ஒரு தகுந்த வாரிசைத் தேடினன். அவன் முயற்சியும் பலனளித்தது. "பார்பிகான்’ என்பது ஐயர்லாந்தில் ஒரு சிறிய கிராமம். இதுவே அவன் ராஜ்யம். இங்கு மிகவும் கீழ்த்தரமான நாடகங்களே நடித்துக் காட்டுவார்கள். தன் வாரிசை அங்கு அழைத்துச் சென்று பட்டம் சூட்டினன். முடிசூட்டு விழாவிற்குப் பின், வாரிசின் தகுதி, அருமை பெருமைகளைப் பற்றி சொற்பொழிவ்ாற்றினன் மந்த புத்திக்கவிகள் மகாராஜா மாக் ப்ளெக்னே. அதில் விசேஷம் என்ன வென்ருல் ஒவ்வொரு வாக்கியமும் முன்னுக்குப் பின் முரணுக அமைந்ததே. முடிசூட்டு விழாவின் கடைசி கட்டம். தன் மேலங்கியை வாரிசின்மீது போர்த்தியவுடன் மாக் ப்ளெக்னே மாயமாய் மறைந்தான். இந்த வினேதமான முடிசூட்டுவிழா சித்திரத்தை நமக்குக் காட்டுபவர் பிரபல ஆங்கில கவி ஜான் டிரைடன். இதனேடு சின்னச் சங்கரனின் யமக அரங்கேற்று விழாவை ஒப்பு நோக்கிப்பாருங்கள். பாரதியின் அருமை யான நையாண்டிச் சித்திரத்தின்முன் மாக்ப்ளெக்னே' என்ன செய்ய முடியும்?. எனவே, பாரதியின் சின்னச் சங்கரன் கதை ஒர் அருமையான நையாண்டி". அந்தக் காலத்திலே சில ஜமீந்தார்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதைச் சுட்டிக் காட்டி, நையாண்டி செய்யும் கிண்டல் சித்திரம்.