பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாரதியின் உள்ளம் கவர்ந்த ஆங்கிலக் கவி இருவர். ஒருவர் ஷெல்லி. இன்னொருவர் பைரன். இவ்விருவர் தம் கவிகளிலும் ஈடுபட்டார் பாரதி. 1902-ம் ஆண்டு எட்டயபுரம் பெருமாள் கோவில் தெருவிலே சங்கம் ஒன்று நிறுவினர்; இலக்கிய வட்டம். அதன் பெயர் ஷெல்லியன் கில்டு' என்பது. அந்த இலக்கிய வட்டத்திலே உள்ள நண்பர்களுக்கு ஷெல்லி, பைரன் ஆகியோரின் கவிகளைப் படித்துக் காட்டி விமரிசனம் செய்தார் பாரதி. ஜமீந்தார்மீது மனவருத்தம் ஏற்பட்ட பிறகு எட்டய புரத்தில் இருத்தல் இயலுமா? இருந்துதான் என்ன செய்வது? எனவே, பாரதியார் எட்டயபுரத்தை விட்டுப் புறப்பட்டார்; ம துரை சேர்ந்தார். எம். கோபால கிருஷ் ணய்யர் என்பவர் பாரதியின் நண்பர். வேலை தேடி மதுரை வந்ததாக அவரிடம் தெரிவித்தார் பாரதி. அது கேட்ட ஐயர் பாரதியை மற்ருெரு நண்பரிடம் அனுப்பினர். அந்த நண்பர் பெயர் சண்முகம் பிள்ளை என்பது: அரசன் சண்முகனர். இவர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார்; உடல்நிலை காரண மாக மூன்று மாத ஓய்வு எடுக்க எண்ணியிருந்தார். அந்த மூன்று மாத காலம் தமக்குப் பதிலாக வேலை பார்க்க விருப்பமா என்று கேட்டார் சண்முகம்பிள்ளை, பாரதியாரும் இணங்கினர்: மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் வேலையை ஏற்றுக் கொண்டார்; 1904-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மூன்று மாதம் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். மாதச் சம்பளம் ரூபாய் பதினேழரை.