பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 "ஸ்டேஜ் மானேஜராக விளங்கிய நிதானக் கட்சியினர் திலகர் தலைவராக வருவதை விரும்பவில்லை; பலவாறு முயன்றபின் தாதாபாய் நவுரோஜியையே கல்கத்தா காங்கிரஸ் தலைவராக்குவது என்று முடிவு செய்தனர். தாதாபாய் நவுரோஜியும் கல்கத்தா காங்கிரசுக்குத் தலைமை வகிக்க ஒப்புக் கொண்டார். நிதானக் கட்சியினர் என்ன நினைத்தனர்? தாதாபாய் தங்கள் பக்கம் நிற்பார் என்று எண்ணினர். - 'காங்கிரஸ் தலைமைக்குத் திலகர் வரக் கூடாது என்றும், தாதாபாய் நவுரோஜியே வரவேண்டும் என்றும் சொல்லும் ஜனங்களிலே சிலர் தாதாபாய் நவுரோஜி நிதானக் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைக்கிருர்கள். இது மிகவும் தப்பான நம்பிக்கை. "பிரிட்டிஷாரை சும்மா கெஞ்சிக் கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை. இந்தியர்கள் தமது நலத்தைத் தாமே தேடிக் கொள்ள வேண்டும்" என்ற கோட்பாட்டிலே தாதாபாய் நவுரோஜி திலகரைக் காட்டிலும் மிஞ்சியவர். இதையறியாத சிலர், தாதாபாய் நவுரோஜி சென்னை வக்கீல்களைப்போல கோழை ராஜ தந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டு இருக்கிருர்கள்." (17 - 11 - 1906) இவ்வாறு இந்தியா’ பத்திரிகையில் எழுதினர் பாரதியார். தாதாபாய் காங்கிரசுக்குத் தலைமை வகிக்க வேண்டும் என்று நிதானக் கட்சியார் தீர்மானித்த உடனே புதிய கட்சியார் அதை ஆதரித்தனர்; எதிர்க்க வில்லை. திலகர் தலைமை வகிக்க வேண்டும் என்பதையும் வற்புறுத்தாமல் விட்டனர். பிறகு என்ன? புதிய கட்சியார் தங்களுக்கு பலம் திரட்டுவதில் முனைந்தனர். இது பற்றி "இந்தியா"