பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t;8 தான் இந்தியா பத்திராதிபர் பூரீமான் திருமலாச்சாரியார் வீடு என்று தெரிந்து கொண்டேன். ஒரு நாள் மாலை நாலு மணி சுமாருக்கு, நான் "இந்தியா அதிபர் திரு. ஆச்சாரியாரைப் பார்ப்பதற்காக அப் பெரிய வீட்டிற்குள் புகுந்தேன். அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் அவர் மாடியில் இருப்பதாக அறிந்தேன். நான் மாடிக்குச் சென்றேன். அங்கு ஒரு அய்யங்கார் அமர்ந்திருந்தார். அவர் இளம் வயதினராகக் காணப் பட்டார். முகத்தில் அறிவுச் சுடர் பிரகாசித்துக் கொண் டிருந்தது. அவர்தான் அதிபர் பூரீ எஸ். என். திருமலாச் சாரியாராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவரைக் கேட்டேன். "ஆம்" என்ருர் அவர். அவரிடம் என் ஊரும் பேரும் சொன்னேன். மாடியின் உள்ளரங்கை நோக்கி, 'பாரதி! உங்கள் ஊரார் ஒருவர் உம்மைத் தேடி வந்திருக்கிருர்' என்று உரக்கக் கூவினர். உடனே உள்ளிருந்து இருவர் வந்தனர். முண்டாகக் கட்டுக்கும், முறுக்கு மீசைக்கும் பெயர் பெற்றது எங்கள் ஜில்லா. எனவே தலைப்பாகைக் கட்டைப் பார்த்ததுமே அவர்தான் பாரதியார் என்பதைத் தெரிந்து கொண்டேன். முறைப்படி அதிபர் பூரீ ஆச்சாரியார் பாரதியாரை அறிமுகப்படுத்தினர். ஆசிரியர் பாரதியார் என் ஊரையும் பேரையும் பற்றி உசாவினர். "ஒட்டப்பிடாரம். வக்கீல் உலகநாத பிள்ளை மகன் சிதம்பரம்' என்றேன். "ஓ! அப்படியா! பிள்ளைவாளின் பிள்ளையாண்டை தாங்கள்! உட்காருங்கள்' என்று கூறி அங்கிருந்த நாற் தாலியில் அமரச் செய்தார்.