பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இவ்வாறு படம் போட்டுத் தமது பத்திரிகையிலே வெளியிட்டார் பாரதியார். குறிப்பு ஒன்றும் வெளியிட் டார்; அது வருமாறு : 'துரத்துக்குடி ஸ்வதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி யார் ஸ்டீமர்கள் கொண்டு வந்திருக்கும் மங்களகரமான செய்தியைக் கருதி நாம் 'சுதேசியக் கப்பல்கள்" என்ற சித்திரம் பதிப்பித்திருக்கின்ருேம். துரத்துக்குடியாரின் அரிய முயற்சிக்கு நமது நாட்டிலுள்ளோர் அனைவரும் பொருளாலும், வாக்காலும், வேறு வகையாலும் துணை புரியக் கடமைப் பட்டிருக்கிருர்கள் என்பதை இங்கே வலி யுறுத்துகிருேம்.' இவ்வாறு எழுதினர் பாரதியார். தூத்துக்குடியிலே பொங்கி எழுந்த சுதேசி இயக்கத்துச்கு எவ்வாறு ஆக்க மும், ஊக்கமும் அளித்து வந்தார் பாரதியார் என்பதை இதுவரை கண்டோம். ஆயிரத்துத் தொளாயிரத்து ஏழாம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியிலே சூரத் நகரிலே நடைபெற இருந்தது காங்கிரஸ் மகாநாடு. மேற்படி மகாநாட்டுக்குத் தமிழ் நாட்டிலிருந்து முப்பது பேரை அழைத்துச் சென்ருர் பாரதியார். இதற்கான செலவை யார் கொடுத்தார்? மண்டயம் பூரீநிவாசாச்சாரியார் ஒரு பகுதி பணமும், தூத்துக்குடி வ. உ. சிதம்பரம்பிள்ளை இன்னொரு பகுதி பணமும் கொடுப்பது என்று ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ் நாட்டிலே திலகரின் தீவிர கட்சிக்குத் தலைவ ராக முன்னின்றவர் பாரதியார்; பிரசாரம் செய்தவர் பாரதியார்; சூரத் காங்கிரசுக்குப் பிரதிநிதிகளைத் திரட்டிச் சென்றவரும் பாரதியாரே. சுருங்கச் சொன்னல் திலகரின் தீவிர கட்சிக்காகத் தமிழ் நாட்டில் முன்னின்று பாடுபட்ட வர்:பாரதியாரே.