பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழுதிடல் மறக்கிலேனே

என்று பாடுகிறார்

இந்தப் பாடல்களுக்கு ஈடு இணை உலகில் எங்குமில்லை. இங்கு பாரதியின் சுதந்திர தாகம், உலகின் உச்சத்திற்குச் செல்கிறது.

விடுதலை என்னும் தலைப்பில் பாரதி ஒரு அற்புதமான பாடலைப் பாடுகிறார் இங்கு

விடுதலை, விடுதலை, விடுதலை என்று மும்முறை குறிப்பிடுகிறார்.

பிலஹரி ராகத்தில் இப்பாடலைப்பாடுகிறார்.

இப்பாடலில் அன்னிய ஆட்சியிலிருந்து நாடு அரசியல் விடுதலை பெற வ்ேடும் என்று மட்டுமல்லாமல்ல அனைத்து மக்களும் விடுதலை பெற வேண்டும். பரிபூரண சுதந்திரம் வேண்டும் என்று விடுதலைக்குப் புதிய இலக்கணம் வகுத்துக் கூறுகிறார்.

பறையருக்கும் இங்கு தீயர்

புலையருக்கும் விடுதலை

பரவரோடு குறவருக்கும்

மறவருக்கும் விடுதலை

விடுதலை மட்டுமல்ல

திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்த யாவரும்

தேர்ந்த கல்வி ஞான மெய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே

என்று அனைவரும் விடுதலை பெற்று தொழிலும் கல்வியும் பெற்று உயர்ந்த நிலையடைய வேண்டும் என்பது பாரதியின் விடுதலை தத்துவம் என்பதாகும்.

--

இன்னும்,

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்.

வைய வாழ்வு தன்னில் எந்த

|()