பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்களையும் அழித்து தங்கள் சரக்குகளைத் திணித்து நமது நாட்டுப் பொருளாதாரத்தை தொழில்களை அந்நிய ஆட்சியாளர்கள் அழித்தார்கள். அவர்களுடைய பொருள்களை இந்தியாவின் சந்தைகளில் குவித்து இந்த நாட்டின் உற்பத்தியை நாசம் செய்து தங்கள் வியாபாரத்தைப் பெருக்கினார்க். இவை பற்றி ஏராளமான செய்திகள் உள்ளன. அவைகளை விரிவாக எடுத்துக் கூற இந்த நூலில் இடமில்லை. தனி நூல் எழுதலாம்.

அந்நிய வஸ்து வர்ஜனம்

இந்தியப் பொருளாதாரத்தில், அந்நியப் பொருள்களை வாங்காமையும் உள்நாட்டுப் பொருள்களையே வாங்க வேண்டும் என்றும் ஒரு தேச பக்தி இயக்கமாகவே, சுதந்திரப் போராட்டத்தின் பகுதியாகவே நடத்தினோம். அன்று, அன்னியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்களும் இதர ஐரோப்பியர்களும் நமது நாட்டு சந்தையை அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டும் பிடித்துக் கொண்டார்கள். அதனால் நமது நாட்டுச் செல்வமு’ கொள்ளை போயிற்று. அத்துடன் நமது நாட்டுப் பொருள்களும் விற்பனையாகாமல் நமது தொழில்கள் பாதிக்கப்பட்டது. மேலும் நமது நாட்டு உற்பத்திப் பொருள்களும் அந்நிய ஆட்சியாளர்கள் அதிகமான வரிகளைப் போட்டும் நமது வியாபாரத்தை முடக்கினார்கள். அதனால் அன்னிய வர்த்தகப் பொருள்களுடவ் போட்டி போட முடியாமல் நமது கைத்தறி முதலிய நமது உள்நாட்டுத் தொழில்களும் பாதிக்கப்பட்டு அழிவை நோக்கிச் சென்றது.

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், வியாபாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், சுத்ந்திரப் போராட்டத்தின் பகுதியாக சுதேசி இயக்கத்தையும் முன் வைத்தோம். இன்று நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் சுதேசி இயக்கம் மிகவும் அதிகமான அளவில் அவசியப்பட்டிருக்கிறது. o

இன்று உலகில் வியாபாரப் போட்டியும் சந்தைப் போட்டியும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் வியாபாரப் போட்டி, சந்தைப் போட்டிகாலனிப் போட்டிகாரணமாகத்தான் இரு உலகப் போர்கள் ஏற்பட்டு, பெரும் உயிர் நாசமும் பொருள் நாசமும் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் போர் என்றால் உலகம் அச்சமடைந்திருக்கிறது. உலகப் போர் நடத்தும் சக்தியை வல்லரசுகள் இழந்திருக்கின்றன. ஆயினும் வியாபாரப் போட்டியும் தொழில் போட்டியும் சந்தைப் போட்டியும் தொடர்கிறது. உலகில் ஏழு நாடுகள் குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய 7 நாடுகள் உலக வியாபாரத்திலும் சந்தைப் பிடிப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எட்டாவது நாடாக ரஷ்யா முண்டிக் கொண்டிருக்கிறது. மேலே குறிப்பிட்ட 7 நாடுகளுக்கிடையிலும், 1. அமெரிக்க ஐக்கிய நாடுகள், 2. ஜப்பான், 3. ஐரோப்பிய நாடுகள் ஆகியவை 3 மைல்களாக ஆதிக்கப் போட்டியில்

123