பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோயராய்

ஆயுர்த்துத்தின்றுழலும் புலையரேனும்

கங்கை வார் சடைக்கரந்தார்க்

கன்பராயின் -

அவர் கண்டீர் யகம் வணங்கும்

கடவுளாரே

என்ற வாக்கைத் தமிழ் வேதமாகக் கொண்டாடுவோம் அதன்பொருளைத் தெரிந்து கொள்ளவோம்.

“ஒக்கத் தொழுகிற்றிராயின் கலியுகம் ஒன்றுமில்லை’ என்ற திருவாய் மொழிக்கருத்தை அநேகர் அறியாதிருக்கிறார்கள். ஹிந்துக்களுள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் நாம் தொல்லைப்படுவோமேயின்றி அழிந்து போய்விட மாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்னும் வறுமை மிகுதியபட்டாலும் பெரியதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்கு ஸ்வர்நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தைக் கவனிக்காமல்,அசிரத்தையாக இருப்போமானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை.

ஹிந்து மதம் என்று, சைவம் வைஷ்ணவம் முதலிய ஆறு சமயங்களும் அதன் உட்பிரிவுகள் இதை தேசத்து ஜனங்களில் பெரும்பாலோர் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குருக்கள் மடாதிகாரிகள் முதலிய சிலர் மறந்து போயிருப்பதாகத் தெரிகிறது.

‘திரமென்று தந்தம் மதத்தையே தாமதச்

செல்கை கொடுமுறை அறிவரார்?

ஆறு சமயங்கடொறும் வேறும் வேறாகி விளையாடும் உனையாவரறிவார்’ *

என்று தாயுமானவர் சொல்லியது பாரத தேசத்து மகாஜனங்களுக்கன்று. மஹா ஜனங்கள் இவ்வுண்மையை நன்றாகத் தெரிந்து நடக்கிறார்கள். பிரம்மrத்திரிய வைசிய சூத்ர என்ற நான்கு பிரிவிலும் பெரும் பகுதியோர் எல்லாத் தெய்வங்களையும். ஒன்று போலவே வணங்குகிறார்கள், வேதரிவிகளைப் போல.

ஆனால் சைவ, வைணவ மடங்களிலும் பெளராணிகர் கூட்டத்திலும்

பரஸ்பரமாகிய மத கண்டனைகள் கொஞ்சம் நடந்து வருகின்றன. அதை உடனே நிறுத்த வேண்டும்’ என்று மகாகவி பாரதியார் தனது கட்டுரையில்

134