பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களுடைய புத்திக்குச் சற்றேனும் புலப்படாதிருப்பதை எண்ணுந்தோறும் எனக்கு மிகுந்த வருத்தமுண்டாகிறது. இத்தனை கஷ்டத்துக்கிடையே ஜாதிக் கொடுமை ஒரு புறத்தே தொல்லைப்படுத்துகிறது என்று மகாகவி மிகவும் பன்வருந்தி எழுதுகிறார்.

பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட ஜாதியார்களே அதி ஏழைகளாக இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத விஷயம். உழைப்பும் அவர்களுக்குத்தான் அதிகம். அதிக உழைப்பு நடத்தி வரும் வகுப்பினருக்குள்ளே அதிக வலுவு ஏற்படும். அநீதி உலக முழுவதிலுமிருக்கிறது. எனினும் நம்முடைய தேசத்தைப் போல இத்தனை மோசமான நிலைமை வேறு எங்குமில்லை என்று மிகவும் மனம் வருந்தி மகாகவி எழுதுகிறார்.

இவ்வாறு நமது நாட்டில் ஊரிப் போயிருக்கும் ஜாதிப்பிரச்சினையைப் பற்றி மகாகவி பாரதி மேலும் எழுதுகிறார்.

இங்ஙனம் ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும். நாட்டில் மனுஷ்ய சுதந்திரம் ஸ்மத்வம், ஸ்கோதரத்வம் என்னுங்கொள்கைள ைநிலை நிறுத்து தென்றால் அது ஸ்ாதாரணவேலையா? கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா? பறை பதினெட்டாம். துளை நூற்று எட்டாம்? அதாவது பறையர்களுக்குள்ளே 18 பகுதிகளும் துளையர்களில் 108 பகுதிகளும் இருக்கின்றனவாம். மேலும் பறையன் பள்ளன் சக்கிலியன் எல்லோரும் வெவ்வேறு ஜாதிகள் ஒன்றுக் கொன்று பந்தி போஜனம் கிடையாது. பெண் கொடுக்கல் வாங்கல் கிடையாது. கேலி, கேலி, பெருங்கேலி.

இங்ஙனம் ஏற்கனவே மலிந்து கிடக்கும் பிரிவுகள் போதாவென்று பல புதிய பிரிவுகள் நாள்தோறும் ஏற்பட்டு வருகினஜ்றன. சீர்திருத்தம் வேண்டுமென்ற நல்ல நோக்கமுடையவர்களிலே சிலர் செய்கை நெறியுணராமல் புதிய வகுப்புகள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். கடையத்து வேளாளரில் இங்கிலிஷ் படித்த சிலர் தாங்கள் ‘திராவிட பிராமணர்” என்று பெயர் வைத்துக் கொண்டு பரம்பரையாக வந்த ‘பிள்ளை'ப் பட்டத்தை நீக்கி ‘ராயர் பட்டம் சூட்டிக் கொண்டிருக்கறிார்கள். திருஷ்டாந்தமாக ஒருவருக்கும் ஆண்டியாப்பிள்ளை’ என்று பெயர் இருந்தால் அவர் அதை லர்க்கார் மூலமாக “ஆண்டியப்ப ராயர்’ என்று மாற்றி அப்படியே சகல விவகாரங்களும் நடத்துகிறார். இந்தத் திராவிடப் பிராமணரின் பட்டம் எப்படி நேரிட்டது என்பதைக் கண்டுபிடிக்க வழியில்லை. என்று மகாகவி பாரதியார் இக்கதையை வேடிக்கையாகத் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

மகாகவி பாரதியார் மேலும் எழுதுகிறார். ‘எல்லா வகுப்பு மக்களுக்கும் சரியான படி படிப்பு சொல்லிக் கொடுத்தால் எல்லோரும் ஸ்மான

142