பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபலமடைந்திருந்தனர்.

தத்துவஞானத்துறையில் ஆழ்ந்த சிந்தனையைச் செலுத்திய காரல் மார்க்ஸ், அன்று மேற்கு ஐரோப்பாவில் நிலவியிருந்த பல்வேறு தத்துவ ஞானப்பிரிவுகளை ஆழ்ந்து படித்தார். இயக்கவியல் துறையில் ஹெகல் கருத்துக்களையும் பொருள் முதல்வராத சிந்தனையில் பியர்பாக் கருத்துக்களையும் ஆழ்ந்து படித்தார். விரிவாக ஆராய்ச்சிகள் செய்தார். இந்த இரு பிரிவுகளிலும், ஹெகலையும் பியர்பாக்கையும் தாண்டி பல புதிய கருத்துக்களும் கண்டுபிடிப்புகளும் நிறைந்த தனது தத்துவ ஞானக் கருத்துக்குளையும் வெளியிட்டார். காரல் மார்க்ஸில் தத்துவ ஞானக் கருத்துக்களைத் தொகுத்து பார்த்தால் அது தனியா இய்க்கவியல் பொருள் முதல் வாதக்கருத்துத் தொகுப்பாகக் காணப்படுகிறது. அதை மார்க்யே தத்துவஞான என்றுதான் குறிப்பிட வேண்டும்.

காரல் மார்க்ஸின் தத்துவ ஞான சிந்தனையின் தளம் மேற்கு ஐரோப்பிய சிந்தனைதளம்தான். அவருடைய தத்துவஞானசிந்தனையின் மூலம் கிரேக்க தத்துவஞான மூலம் தான். அதிலிருந்து தான் அவர் நவீன ஐரோப்பிய சிந்தனைக்கு வருகிறார்.

பாரத தத்துவஞான சிந்தனை வளத்தையும் சீன தத்துவஞான சிந்தனை வளத்தையும் பற்றி காரல்மார்க்ஸ் அறிந்திருக்கவில்லை. பாரதத்தின் பல்வேறு கருத்துச் செல்வங்களையும், சீனக் கருத்துச் செல்வங்களைப் பற்றியும் காரல் மார்க்சிற்கு கிடைத்த ஞானமெல்லாம் பிரிட்டிஷ் ஆவணங்களிலிருந்தும் லண்டன் அருங்காட்சியத்திலிருந்தும் கிடைத்த தகவல்களேயாகும்.

தத்துவஞானக் கருத்துக்களைப் பொருத்தவரை, பொருள் முதல் வாதக் கருத்துக்களைப் பற்றி இந்திய வேதங்களிலும் உபநிட தங்களிலும் ஏராளமான குறிப்புகள் உள்ளன. காட்சி, பிராமணம் பிரத்யட்சம் என்பது அதன் அடிப்படை தேவகுரு பிரகஸ்பதி அதன் மூலவராகும். ஆனால் பாலில் வெண்ணெயும், நெய்யும் இருப்பதைப் போல, எள்ளில் எண்ணையும் இருப்பதைப் போல கடவுள் என்பது அந்தர்யாமியாக ஒரு சக்தியாக இருப்பதை இந்தியத் தத்துவ ஞானிகள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். - * இயக்கவியண்லப் பொருத்தவ ரைமுதன்முதலில் மிகவும் விரிவாக புத்தர் பிரான் விளக்கிக் கூறியுள்ளார். புத்தருடைய இயக்கவியல் கருத்துகள் தான் உலக தத்துவங்களில் முதன் முதலில் தோன்றிய தத்துவக் கருத்துக்களாகும். இந்தத் துறையில் புத்தருடைய காசி ஆசிரம்த்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பிராமணர்கள் சீடர்களாக இருந்து அவருடைய தத்துவஞானக் கருத்துக்களைப் பரப்பியதாக புத்தஜாதக ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. புத்தர் பிரான் கூறியருளிய இயக்கவியல் தத்துவஞானக் கருத்துக்களைப்பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பல ஆய்வுகளை நடத்தி

164