பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கு முருகன் பார்ப்பனக் கோலத்தில் வள்ளியைப் பிடிப்பதை ஜாதி சமத்துவத்தை பாரதி வெளியிடுகிறார்.

சிவசக்தி என்னும் தலைப்பில்

நின்னருள் வேண்டுகின்றோம்

-எங்கள்

நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே”

என்று கூறி நமது நலன்கள் அனைத்தையும் காத்திட சிவ சக்தியை வேண்டுகிறார்.

காணி நிலம் வேண்டும் என்றும் பாடலில்,

“என்றன் பாட்டுத்திறத்தாலே

இவ்வையத்தை

பாவித்திட வேண்டும்’ என்று வேண்டுகிறார். நல்லதோர் வீணை-பாரதி

நல்லதோர் வீணை செய்தே. அதை நலங்கெடப் புழுதியில்

எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து

விட்டால் என்றும்,

வல்லமை தாராயோ- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி-நிலச் i சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவையே எண்ணல் வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்த நல்லறிவு வேண்டும்.

| 7