பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவை வளர்த்திட வேண்டும்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும். இங்கு

வாழும் மனிதருக்கெல்லாம்

பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப்

பாரை உயர்த்திட வேண்டும்’

என்றெல்லாம் எளிய சொற்களில் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுகிறார்.

புதுமைப் பெண்

புதுமைப் பெண், பெண்மை வாழ்க, பெண்கள் விடுதலைக்கும்மி, பெண்

விடுதலை என்னும் தலைப்பு பெண்கள் சமத்துவம், பெண் விடுதலை

என்னும் கருத்துக்களை மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.

பெண் விடுதலைப் பற்றி இத்தனை தெளிவாக சென்ற நூற்றாண்டின் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கருத்துக்களை தனது கவிதைகளை எடுத்துக் கூறிய புலவன் பாரதியைத் தவிர வேறு யாருமில்லை என்று கூறலாம்.

‘புதிய கோணங்கி’ என்னும் தலைப்பில் பாரதி கருத்து நிறைந்த சிறந்ததொரு பாடலைப் பாடியுள்ளார். அதில் வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது தர்மம் பெருகுது என்று குறிப்பிடுகிறார்.

நாட்டுப் பெரியோர்களைப் பற்றிதாயுமானவர், நிவேத்தா, அபேதானந்தா ஒவியர் மணி இரவி வர்மாசுப்பராம தீட்சிதர், மகோமகோபாத்தியாயர் வெ. சாமிநாத சர்மா, இந்து மதாபிமான சங்கத்தார் என்று சான்றோரைப் பற்றி பாரதி சிறப்பாகப் பாடியுள்ளார்.

சுயசரிதை

பாரதியார் எழுதியுள்ள சுயசரிதைப் பாடல் ஒரு தனி இலக்கியமாகும். அத்துடன் பாரதி அறுபத்தாறு என்னும் தலைப்பில் எழுதியுள்ள பாடலும் சேரும்.

சுயசரிதையில் சில சிறந்த புதிய கருத்துக்களை முன் வைக்கிறார். அதில் ஒன்று ஆங்கிலக் கல்வி பற்றியது. இன்னும் மகாகவி பாரதி தனது கட்டுரைகளில் கல்வியை அதிக முக்கியத்துவம் கொடுத்து தேசியக் கல்வி பற்றி விரிவாகப் பேசுகிறார். அக்கட்டுரைகளில் அவர் கல்வி பற்றிக் கூறியுள்ள கருத்துக்கள் இன்றும் பொருத்தமானதும் ஆய்வுக்குரியதுமாகும். அதைப்பின்னர் பார்ப்போம்.

சுயசரிதை என்னும் கவிதைத் தொகுப்பில் ஆங்கிலப் பயிற்சி பற்றி எழுதுகிறார்,

22