பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைத்தையும் ஒன்று படுத்துகிறார். அது ஆதிசங்கரின் சிறப்பாகும். அதுவே இந்து தர்மம். (சநாதன தர்மம்) என்னும் சிறப்புமிக்க தர்மமாகும். இதுபற்றி மகாகவி பாரதி மிகவும் தெளிவான சில கருத்துக்களை தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

ஜீவன் முக்தி: அதுவே சிதம்பரம் =

ஜீவன் முக்தி என்பது ஒரு அருமையான சொற்றொடராகும். மனிதர் அனைவரும் ஜீவன் முக்தி ராகப் பக்குவப்படவேண்டும். அதற்கு ஒவ்வொரு மனிதனும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும்.

(1) எப்போதும் வானத்திலே சுற்றும் பருந்து போல், போக விஷயங்களினால் கட்டுப்படாமல் பரமாத்மாவின் ஞானக்கதிரை விழித்து நோக்குதலே விடுதலை. அதுதான் சிதம்பரம் மகனே! சிதம்பரத்துக்குப் போ...

(2) சிதம்பரத்தில் நடராஜர் சிவகாமி சக்தி பக்தருக்கு வரதானம் கொடுக்கிறார் போய் வரம் வாங்கு.

(3) சிதம்பரமே ஸ்ரீரங்கம் அதுவே பழனிமலை. எல்லா புண்ணிய rேத்திரங்களும் ஜீவன் முக்திச் சின்னங்கள் என்று தெரிந்து கொள். உனக்கு,

‘கேrமமும் நீண்ட வயதும், ஜீவன் முக்தியும் விளைக’ என்று குறிப்பிடுகிறார்.

  • மகாகவி பாரதி “நவராத்திரி’ பற்றி சிறந்ததொரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள கருத்துக்கள் எல்லோருக்கும் எந்நாளும் பொருந்தும் குறிப்பாக பாரதத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.

‘நவராத்திரி’ என்பது ஒன்பதிகவு பராசக்தியை பூஜை செய்கிறோம். லகஷ்மியென்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என்று மூன்று தொழில் நடத்துவது.

‘ஹிமாசம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் சட்டத்தார் எல்லாம் இந்தப்பூஜை செய்கிறோம்” என்று குறிப்பிடுகிறார்.

  • சக்தி: நல்லலெல்லெழுத்து முத்துச் சேர்ந்த மொழி. விக்கிரமாதித்தனும் காளிதாசனும் வணங்கிய தெய்வம், ‘உலகத்தார் இந்த பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சாத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்ய வேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு மிகப் பயனுடைய காரியம். மேலான வழி இவ்வாறு மகாகவி பாரதி நவராத்திரி பூஜையைப் பற்றிச் சிறப்பாகக் கூறுகிறார்.

55