பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவிட்டறிவதற்குத் தமிழ் நூல்களே தக்க அளவு கோலாகின்றன. இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் சம்ஸ்கிருதத்தின் திரிபுளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாதனவும் சம்ஸ்கிருத

தியே மேன்மை பெற்றனவாம்.

---

கலப்புக்கு பிந்

தமிழ் பாஷைக்கோ இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும் அவருடைய சிஷ்யராகிய கிரனதுமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்ட தென்பது மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சம்ஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே, எனினும் வ மொழி கலப்புக்கு முந்தித் தமிழுக்கு வேறு வகையான இலக்கணமிருந்து ஒரு வேளை பின்னிட்டு மறைந்திருக்கக்கூடு மென்று நினைப்பதற்கு பல ஹேதுக்களிருக்கின்றன. இஃது எவ்வாறாயினும் சம்ஸ்கிருத பாழையின் கலப்புக்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த நாகரிகமொன்று நிலவி வந்ததென்பதற்கு அடையாளமாக தமிழில் மிக உயர்ந்த தரமுடைய பல பழைய இலக்கிய நூல்கள் காணப்படுகின்றன என்று மகாகவி

குறிப்பிடுகிறார்.

இங்கு நாம் தமிழ் இலக்கணத்தைப் பற்றிப் பேசும் போது, ஒரு விவரத்தைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் இலக்கணத்தில், 1) எழுத்து, 2) சொல், 3) பொருள், 4) யாப்பு, 5) அணி ஆகிய ஐந்து இலக்கணம் அமைந்திருக்கிறது. இது தமிழ் மொழிக்குரிய தனிச் சிறப்பாகும். வடமொழி இலக்கணத்தில் எழுது சொல், யாப்பு அணி ஆகிய நான்கு மட்டுமே உள்ளது.

இங்கு தமிழ் இலக்கணத்தின் தனித்தன்மை தெளிவாக வெளிப்படுகிறது. பொருள் இலக்கணம் தமிழ் மொழிக்குரிய தனித்தன்மையான தாகும் ஒரு மொழியின் இலக்கணம் என்பது அம்மொழியின் வளர்ச்சியை அதன் செழுமையை எடுத்துக் காட்டுகிறது. எனவே தமிழ்மொழியின் இலக்கணம் வளர்ச்சியும் செழுமையும்மிக்கது.

உழக்கும் மறை நாலினும் உயர்ந்து

உலகம் ஒதும்

வழக்கினும் மதிக்கவியினும்

மரபின் நாடி

நிழல் பொலி கனச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்

சுழல்புரை சுடர்க்கடவுள் தந்த

68