பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மகாத்மா காந்தி முதல் ஜவஹர்லால் நேரு இந்திய சுதந்திரப் போராட் டத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தேச சேவையில் ஈடுபட்டிருந்தார். தாய் கமலா நேரு காஷ்மீரத்தைச் சேர்ந்தவர். "மலிந்த உடலும் அழகிய தோற்றமும் கொண்ட ബIT , இதையெல்லாம் நான்கு வயது சிறுமி இந்திரா கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சில சமயம் தான் தாயாரிடம் 'அப்பா எப்போது அம்மா சிறையிலிருந்து வந்து என்னைப் பார்க்க வருவார்' என்று அடிக்கடிக் கேட்பார். இந்திரா டெல்லியில் உள்ள ஒரு கிண்டர் கார்டன் பள்ளியில் முதலில் சேர்க்கப்பட்டார். பின்னர் அலகாபாத்திலுள்ள ஒரு கான்வென்ட் பள்ளி, ஒரு போர்டிங் ஸ்கூல் இப்படிப் பல பள்ளி களில் பயின்றார். வீட்டில் ஒரு பெரிய லைப்ரரி இருந்தது. அதில் ஏராளமான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந் தன. தாத்தாவினுடைய சட்டப் புத்தகங்களைத் தவிர, வீட்டிலுள்ள-அனேகமாக-எல்லா நூல் களையும் எடுத்து இந்திரா விடாமல் படித்து விடுவார். சில சமயம் தாத்தாவிடம் சென்று "நான் ஜோன் ஆஃப் ஆர்க்கைப்போல் வீரமுடன் வாழ்வேன்” என்று கூறுவார்.