பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மகாத்மா காந்தி முதல் விடுதியில் பணியாளர்களே கிடையாது. பேருக்குவது, மொழுகுவது, சுத்தம் செய்வது, சமையல் செய்வது, உணவு பரிமாறுவது போன்ற அனைத்துப் பணிகளையும் மாணவிகளே செய்து கொள்ளவேண்டும். எவ்வளவுக்கு அங்கு சுதந்திரமும், இன்பமும், சந்தோஷமும் நிலவியதோ அத்தனைக்கு கண் டிப்பும் கெடுபிடிகளும் தாராளமாக உண்டு. இது இந்திராவுக்கு காந்திஜியின் ஆசிர மத்தையே நினைவுபடுத்தியது. அன்று வங்காளிகளின் புது வருஷப் பிறப்பு கொண் டாட்ட தினம். சாந்திநிகேதன் விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது. மாணவிகள் அனைவரும் மாலைகளினாலும், மாவிலைத் தோரணங்களினாலும் சாந்திநிகேத னுக்கு மேலும் அழ் கூட்டிக்கொண்டிருந்தனர். அப்போது நேருஜியிடமிருந்து தந்தி ஒன்று வந்தது. அதில், கமலாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது; அதனால் உடனே இந்திராவை அலகாபாத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்” என்று தாகூருக்கு நேருஜி எழுதி யிருந்தார்.