ராஜீவ் காந்தி வரை 109 தந்தையின் அருகிலேயே இருந்து அவரைக் கண்ணும் கருத்துமாகக் காக்க வேண்டிய பொறுப்பு இந்திராவுக்கு இருந்தது. அது மட்டு மல்ல; ஒரு வயதே நிரம்பியிருந்த அவரது இரண் டாவது மகன் சஞ்சயைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையும் இருந்தது. இந்திராகாந்தி ஒரு ஜீப்பில் ஏறி அகதிகள் முகாம்களுக்குச் சென்று அவர்களுடைய குறை களைப் போக்கினார். ஏழை மக்களின் துயரத்தை முதன் முறையாக இந்திரா நேரில் கண்டார். 1947-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேருவுடன் இந்திரா டில்லியில் யார்க் ரோடி'லுள்ள ஒரு பங்களாவில் குடியேறினார். பின்னர் தீன் மூர்த்தி பவனுக்கு மாறினார். இந்திரா தந்தைக்கு உதவியாக இருந்து கொண்டே அரசியலை கூர்ந்து கவனித்து வந்தார். பிற்காலத்தில் அவருடைய, அரசியல் வாழ்வுக்கு அது அஸ்திவாரமாக அமைந்தது. உலக நாடுகளின் அழைப்பை ஏற்று நேரு வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம்: கூடவே இந்திராவும் சென்றார். இப்படிப் பல நாடுகளுக்கும் தந்தையுடன் சென்று வந்த இந்திரா காந்தி உலகத் தலைவர்கள் பலரை அறிந்திருந்தார். மேலும் பல நாட்டுத் தலைவர்களும் தீன் மூர்த்தி பவனுக்கு வருகை
பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/111
Appearance