பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல் - ாந்தியின் தாயார் மிகவும் தெய்வ பக்தி | 'தவர். எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார் நிது சமயப் பற்று மிக்கவர். காந்திஜி அவ்வூர் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து படித்தார். காந்திஜி மிகவும் அடக்கமான சுபாவமுடையவராய் இருந்தார். அதனால் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவதோ, பொழுது போக்குவதோ இல்லை. ஆனால் சிறு வயதிலிருந்தே நேர்மையாகவும் சத்யவானாகவும் இருந்தார். காந்திஜியின் தந்தை ராஜ்கோட் நகருக்கு திவானாக மாறினார். குடும்பமும் போர்பந்தரை விட்டு ராஜ்கோட்டிற்கு மாறியது. காந்திக்கு ஏழு வயது நடந்து கொண்டிருந்த போது, அவரது தாயார் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து பார்க்க வேண்டுமென்று ஆசைப் பட்டார். காந்திஜி இருந்த தெருவில்தான் கஸ்தூரி பாயின் குடும்பமும் இருந்தது. இரு குடும்பத்தின ரும் உறவினர். சிறுவயதிலிருந்தே காந்தியும் கஸ்தூரிபாயும் ஒன்றாக விளையாடிக் கொண் டிருப்பார்கள். இருவருக்கும் ஒரே வயது. கஸ்தூரியைத் தன் மகனுக்கு முடித்துவிட வேண்டும் என்று புத்லிபாய் விரும்பினார். ஒருநாள் கஸ்தூரியின் வீட்டிற்கு, காந்தியின் பெற்றோர்கள் பெண் கேட்டுச் சென்றார்கள்.